SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, May 11, 2011

பேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம் - 4...(பேச்சிலர்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட் பாம்பே ப்ரெட் டோஸ்ட்)


நீங்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தனியாய்த் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் ஆணா?

கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு ஹோட்டல் உணவால் வயிறும் நாக்கும் கெட்டுப்போய் தவித்துக் கொண்டிருப்பவரா?

நமக்கு சமையல் தெரிந்தால் வாய்க்கு ருசியாய் நாமே வீட்டில் சமைத்துச் சாப்பிடலாமே என்று எண்ணுபவரா?

என்றாவது சில விடுமுறை நாட்களில் மனைவிக்கு ஓய்வளித்து நீங்களே சமைத்துப்போட்டு அவளை அசத்த நினைக்கிறீர்களா?

அட… கவலையை விடுங்க பாஸ். பொம்பளைங்களெல்லாம் ஏரோப்ளேனே ஓட்டுறாங்க… நம்மால இந்தச் சமையலை பண்ண முடியாதா என்ன?
இங்கே நான் கூறும் அனைத்து சமையல்களும் ஏதோ புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதோ… இல்லை செய்து பார்க்காமல் ஏனோதானோவென்று எழுதியதோ அல்ல. எல்லாமே என் வாழ்வில் நானே கற்றுக்கொண்டு அன்றாடம் உபயோகிக்கும் அசல் சமையல்களே.
வாங்க… கலக்குவோம்!

பேச்சிலர்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட் பாம்பே ப்ரெட் டோஸ்ட் :- (ஒருவருக்கான அளவு)

தேவையான பொருட்கள் :-
1. வெண்ணை (அ) நெய் = 2 டீஸ்பூன்
2. காய்ச்சிய பால் = 01 கிளாஸ்
3. சர்க்கரை = 04 டீஸ்பூன்
4. முட்டை = 01
5. ப்ரெட் = 04 ஸ்லைஸ்

எளிதான செய்முறை :-
சமையல் செய்யக் கற்றுக் கொள்ளும் முன் அடுப்பை பற்ற வைக்கவும் தீயைக் கூட்டக் குறைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

1. ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் 04 டீஸ்பூன் சர்க்கரை போட்டு நன்கு கலக்குங்கள்.
2. சர்க்கரை நன்கு கரைந்ததும் முட்டையை மேல்பகுதியில் சிறிய துளை விழுமாறு உடைத்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் பாலில் ஊற்றிக் கலக்குங்கள். பாலில் முட்டையின் வெள்ளைக்கரு தனியாக மிதக்காமல் நன்கு கலந்து விடுமாறு அடித்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை அடுப்பில் வையுங்கள். அடுப்பு ஸ்லிம்மில் இருக்கட்டும். கல் சற்று சூடானதும் ஒரு டீஸ்பூன் வெண்ணை அல்லது நெய்யை அதில் ஊற்றி கல் முழுவதும் படுமாறு தடவிக் கொள்ளுங்கள்.
4. இப்போது ப்ரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக முட்டை சர்க்கரைப்பால் கலவையில் முக்கி எடுத்து கல்லில் போட்டு நெய் அல்லது வெண்ணை தடவி இரு பக்கமும் புரட்டிப்போட்டு டோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
5. ப்ரெட் பொன்னிறமாக டோஸ்ட் ஆன பிறகு அடுப்பை அணைத்து விட்டு ப்ரெட்டை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.
6. இப்போது இந்த ஸ்லைஸ்களை தேவையான டிசைன்களில் வெட்டியோ, அலங்கரித்தோ ஒவ்வொன்றாக ரசித்து உண்ணலாம்.
7. காலையில் இந்த வகை ப்ரேக் ஃபாஸ்ட் உங்கள் நேரத்தைக் காப்பதுடன் உங்களுக்குத் தேவையான கலோரிகளையும் கச்சிதமாக அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

சமையல் செய்ய சோம்பேறித்தனம் படாமல் ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள். முதல் முறை சரியாய் வராமல் போனாலும் நிறை குறைகள் தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் நிச்சயமாய் உங்கள் கைப்பக்குவம் மிளிரத் தொடங்குமென்பது எனது சொந்த அனுபவம் உணர்த்திய பாடமாகும்.

தொடர்ந்து கலக்குவோம்…

1 comment:

  1. இதில் மிக முக்கியம், அடுப்பின் சூட்டை அதிகம் வைக்காமல் இருப்பது தான்...பாலும் சீனியும் சேர்ந்து மிக சுலபத்தில் உங்கள் டோஸ்ட்டை, ரோஸ்ட் ஆக்கிவிடும்..

    ReplyDelete