SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, May 27, 2011

பெட்ரோல்-ரூ.100?, டீசல்-ரூ.100?, சிலிண்டர்-ரூ.500? நல்லாயிருக்கே இது...!


பொதுவாகவே காங்கிரஸ் என்பது பணக்காரர்களுக்காகப் பணக்காரர்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் கட்சி என்று நம் தாத்தா காலத்திலிருந்தே கூறப்படுவதுண்டு. சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சியிலிருந்த எந்தக் காலக்கட்டத்தை ஆராய்ந்தாலும் அப்போதைய பணவீக்கம் ஒன்றே அதற்கானச் சிறப்பானதொரு சான்றாகும்.

சரி... ஒரு சாமான்யனா நம்ம வவுத்தெரிச்சலைச் சொல்லப்போற இந்தக் கட்டுரையில நாம எதுக்கு பணவீக்கம் பத்தியெல்லாம் ஆராய்ஞ்சிக்கிட்டு?...

ரொம்ப நாளாவே நிறையப்பேரு என்ன சொன்னாய்ங்கன்னா… காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் நடத்துறது மன்மோகன் சிங்கோ, சோனியாவோ இல்லை… அம்பானி பிரதர்சும், டாட்டா மாதிரி ஆளுங்களும்தான்னாய்ங்க! அட நான் நம்பவேயில்லைங்க. நம்ம சோனியா மேடம், சின்னய்யா ராகுல் காந்தியெல்லாம் எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுங்க? அவிங்களை மீறி அம்பானியாவது… டாட்டாவாவதுன்னு அப்பாவியாத்தான் நம்பிட்டு இருந்தேங்க இம்புட்டு நாளா!

என்னிக்கி மொதமொதல்ல பெட்ரோல் விலைய பெட்ரோல் கம்பெனிகளே நிர்ணயிச்சிக்கலாம்னு சட்டம் போட்டீங்களோ… அப்போத்தாங்க லைட்டா ஒரு சந்தேகம் எட்டிப்பாத்துச்சி. அரசியல்ன்ற பேருல எங்க அண்டராயரைக் கூட அவுத்து அம்மணமா ஓடவிட ரெடியாயிட்டிருக்கும் அய்யாமார்களே… அம்மாமார்களே… எனக்கொரு சந்தேகமுங்க. ரொம்பகாலமா கஷ்ட ஜீவனத்திலயிருக்கும் விவசாயிங்களுக்கு இதுவரைக்கும் அவங்க பொருளுக்கு அவங்களே வெலவைக்கிற உரிமையைக் குடுக்காத நீங்க… எப்பிடீங்க இவ்வளவு சீக்கிரம் பெட்ரோல் விலை உரிமையை மட்டும் டகார்னு தூக்கிக் குடுத்தீங்க? அம்பானிதான் ஏதோ சொன்னாருன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாய்ங்க… ஆமாங்களா?

சரி… பெட்ரோல் வெலயத்தான் அப்பிடிப்பண்ணீங்க… டீசலையாவது உங்க கட்டுப்பாட்டுலதானே வைச்சிருக்கீங்கன்னு மனசத் தேத்திக்கிட்டுச் சந்தோஷமாத்தான் இருந்தேன்ங்க. ஆனா எப்பவும் போலவே இப்பவும் தாங்கமுடியாத நஷ்டத்தில கதறிட்டிருக்கிற எண்ணைக் கம்பெனிங்களைக் காப்பாத்துறதுக்கு வேற வழியே இல்லைன்னு சொல்லி டீசலும், சமையல் கேஸும் மறுபடியும் வெலய உசத்தப்போறேன்றீங்க. நீங்க என்ன பண்ணாலும் ஊருக்குள்ள கேக்கிறதுக்கு ஆளில்லைன்றது நெஜந்தாங்க. அதுக்காக இப்பிடியா?

காங்கிரஸ் ஆட்சியில பல பொருளாதாரப் புலிகள் இருக்குதுன்னு மெத்தப்படிச்ச மேதாவிங்க பலபேரு பேசிக்கிறப்பல்லாம் கொட்ட எடுத்ததா…எடுக்காததா?ன்னு யோசனை பண்ண முட்டாளுங்க நானு! அப்புறமா புரிஞ்ச பிறகுதாங்க தெரிஞ்சது… பொருளாதாரத்தச் சரியாக் கையாளத் தெரியாத உங்களையெல்லாம் பொருளாதாரப் புலிகள்னு சொன்னா... என்ன மாதிரி ஆளுங்க கொட்ட எடுத்ததா, எடுக்காததா?ன்னு கேட்டா அது தப்பேயில்லதானுங்களே?

ஒரு நாட்டோட பொருளாதாரத்தயும் பொதுமக்களையும் பாதிக்கிறதுல முக்கியச் சமாச்சாரமே விலையேற்றம்தாங்க. எல்லாப் பொருளோட விலையேற்றத்துக்கும் அடிப்படையான முக்கியக் காரணத்துல போக்குவரத்துச் செலவும் ஒண்ணுங்க. அப்படிப்பட்ட போக்குவரத்துச் செலவு விலை ஏறுச்சின்னா ஆட்டோமேட்டிக்கா நாடு முழுவதும் வெலவாசி உயரும்னு உங்களுக்கெல்லாம் தெரியாதுங்களா? நீங்க வுடுற ராக்கெட்டுங்கெல்லாம் மேல பறக்காம கீழ வுழுந்துக்கிட்டு இருக்கிறதும், வெலவாசி மட்டும் ராக்கெட்ட விட வேகமா மேலேப் போறதுமாயிருக்கிற இந்த நேரத்துல மறுபடியும் டீசல் வெலய ஏத்தப்போறேன்றீங்களே? நீங்களெல்லாம் தெரிஞ்சேதான் பண்றீங்களா? இல்ல… தெரியாத மாதிரியே நடிக்கனும்னு யாராவது ஆர்டர் போட்டாய்ங்களா?!

உங்களச் சொல்லிக் குத்தமில்லைங்க. தேசிய அளவுல உங்களுக்குச் சரியான எதிர்க்கட்சியோ… எதிர்க்கட்சித் தலைவரோ இல்லாமப் போயிட்டாங்க. அடுத்த எலெக்சன்ல உங்களுக்குச் சரியானப் போட்டியா பிரதமர் வேட்பாளரா நிறுத்தக்கூட எதிரணிக் கூடாரத்துல யாருமில்லாமப் போயிட்டாங்க. அட அப்படியே எதிர்க்கட்சிங்க யாரையாவது கொண்டு வந்து நிறுத்துனாலும், உங்க சின்னய்யா ராகுல்காந்திய நிறுத்திப்புட்டீங்கன்னா… அட அப்பிடியே ராஜீவ் காந்தி மாதிரியே இருக்காருய்யான்னு சொல்லி ஓட்டுப் போடுறதுக்கு பெரும்கூட்டம் ஒன்னு காத்திக்கிட்டுருக்குங்க! அதுனால நீங்க வைக்கிறதுதான் சட்டமுங்க. நீங்க சொல்றதுதான் உண்மையுமுங்க!

வெளிநாட்டுக் கம்பெனிங்களுக்கெல்லாம் தாராளமா வரிச்சலுகைய வாரி வழங்குறீங்கன்னு சொல்றாங்க. ஆனா மாசச் சம்பளம் வாங்குறவன் தலைல மட்டும் எப்போ பாத்தாலும் முளகா அரைக்கிறீங்களாமே… அப்படீங்களா? அட… மாசச் சம்பளம் வாங்குற பயலுக நாம கட்சி நடத்துறதுக்கு நிதி குடுக்குறானுகளா? இல்ல… நமக்குத் தேர்தல் செலவுக்காவது கைகுடுக்குறானுகளா? எல்லா உதவியும் செய்யுற பணக்காரங்களுக்கு மட்டும்தான் நாம திட்டங்கள் போடுவோம்றதும், இந்தப் பரதேசிப் பயலுகளப்பத்தி நமக்கென்ன கவலைன்னு நீங்க பொருளாதாரத்தப் பிரிச்சி மேயுறதும்… அட்டா… ஓரமா நின்னு வேடிக்கை பாக்கிரதத் தவிர உருப்படியா எங்களால என்னங்க செய்யமுடியுது?

கருப்புப் பணத்தை நெனச்சவுடனே இந்தியாவுக்கு கொண்டு வர முடியாதுன்றீங்க. கருப்புப்பணம் லிஸ்ட்ல இருக்குற பேரைக்கூட வெளிய சொல்ல மாட்டோம்ன்றீங்க. வெளிநாட்டு பேங்க்ல இருக்குற வெவரத்தையெல்லாம் நமக்குத் தரமாட்டாங்கன்றீங்க. இந்த ஒப்பந்தம்ன்றீங்க... அந்தச் சட்டம்ன்றீங்க! கொஞ்சம் கூட வெக்கமில்லாம உங்க அறிவு ஜீவி நிதியமைச்சரை வைச்சிக்கிட்டு நாளுக்கொரு அறிக்கை வுடுறீங்க! அட எங்களுக்குத் தெரியுமுங்க… திருடனே போயி எங்கயாவது திருட்டக் கண்டு புடிப்பானுங்களா? கருப்புப்பணமோ… வெள்ளப்பணமோ நாங்க என்ன உங்க சட்டயப் புடிச்சி கேக்கவாப்போறோம்? எதுவுமே சொரணையில்லாம எவ்வளவுதான் நாங்க ஒதுங்கி நின்னாலும், ஒண்ணுக்குப் பத்தா எங்க மேலயே துரத்தித் துரத்தி பாரம் ஏத்துறீங்களே… உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காவது ஒருநாளாவது எங்கள நினைக்கலாமில்லியா?

பெட்ரோல் வெலய நீங்க எவ்வளவு ஏத்துனாலும் வாங்கி வைச்சிருக்கிற வண்டிய பழைய இரும்புக்கா போடமுடியும்ன்னு உங்களையும் உங்க பரம்பரையையும் கெட்டவார்த்தைல திட்டிப்புட்டுப் பல்லக் கடிச்சிக்கிட்டு நாங்க பெட்ரோல போட்டுக்கிறோம்ங்க. ஆனா டீசல்ல நீங்க ஏத்துற வெலயையும் நாங்களேதான் அழுவனும்னு எங்கள்ல நெறயப்பேருக்கு எப்பவுமேத் தெரியறதில்லைங்க! பணக்காரனுக்கு இதப்பத்தி எப்பவுமே கவலையில்லைங்க. பத்துத் தலைமுறைக்குச் சொத்து வெச்சிருக்கிறவனுக்கு பெட்ரோலுக்கும் தண்ணிக்கும் பெரிசா வித்தியாசமில்ல! லாரி வெச்சிருக்கிறவன் பொழப்பு கூட பெரிசா பிரச்சினையில்லைங்க! அவன் என்ன பண்ணுவான் பாவம்?... டீசல்ல ஏறுற வெலய வாடகைல ஏத்திட்டு போகப்போறானுங்க. எங்கள மாதிரி அப்பாவிங்க தலைலயே எல்லா வெலவுயர்வும் விடியறதுதான் சகிக்க முடியாத விதியாயிப் போச்சிங்க. உங்க சிறப்பான வெவசாயக் கொள்கையால வெவசாயமும், வெவசாயியும் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வர்றதால, நீங்க டீசலை வெலயேத்துனாலும் வெவசாயிங்களுக்குக் கவலையில்லைங்க. இந்த மீனவங்க பொழப்பு? ம்ம்ம்ம்… என்ன பன்றது? கேக்க நாதியில்லைன்னு ஆனப்புறம் என்ன ஆனாதான் என்ன?

உங்களுக்குப் புண்ணியமா போகட்டும் தர்மப்பிரபுக்களே… உங்களுக்கு ஓட்டுப் போட்ட குத்தத்துக்காக ஒரேயொரு உதவி செய்ங்கய்யா! ஆறு மாசத்துல ஒம்போது வாட்டி வெலயேத்தி, ஒவ்வொருவாட்டியும் எங்களுக்கு பிபிய எகிரவைக்கிறதுக்குப் பதிலா ஒரேவாட்டியா வெலயெல்லாம் நான் சொல்ற மாதிரி ஏத்திப்புட்டு மிச்சமிருக்கிற உங்க மூணு வருஷ ஆட்சியில எங்களக் கொஞ்சம் நிம்மதியாவாது இருக்கவுடுங்க! நாடு தழுவிய போராட்டம் வந்துரும்னோ… மக்களெல்லாம் புரட்சி பண்ணிருவாங்கன்னோ நீங்க பயப்பட வேண்டியதேயில்லைங்க. ஏன்னா இது நம்ம இந்தியாங்க! இது உங்களுக்கும் தெரியுமுங்க! என்ன ஒன்னு… ஒவ்வொரு காசையும் செலவு பண்ணும் போதும் மனசுக்குள்ளயே கெட்டவார்த்தைல உங்களையெல்லாம் திட்டிப்போம்ங்க. அது மட்டும்தானே எங்களால முடிஞ்சதுங்க!

பெட்ரோல்-ரூ.100, டீசல்-ரூ.100, சிலிண்டர்-ரூ.500, நல்லாயிருக்கே இது…!ன்னு நீங்க யோசிக்கிறது புரியுதுங்க. தைரியமா ஏத்துங்க. ஆனா ஒரேவாட்டியா ஏத்திருங்க. ஏன்னா எப்படியும் கொஞ்ச கொஞ்சமா எங்களைக் குனிய வைச்சுக் குத்திக் கோமணத்த உருவறதுக்குப் பதிலா… ஒரேவாட்டியா முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கும் சந்தோஷம்… உங்கள ஆட்டுவிக்கறவங்களுக்கும் சந்தோஷம் பாருங்க… அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா எசமான்? மறுபடியும் பெட்ரோல் போடும் போது திட்டனும்ல…? அப்போ உங்கள நெனச்சிக்கிறேன்… வரட்டுங்களா?...

Friday, May 20, 2011

கண்ட கண்ட இடங்களில் ஒதுங்காதீர்கள் காதலர்களே! – பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!


இது தமிழகக் காதலர்களுக்கான ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்! சமீப காலங்களில் பெரிதாய் வெளிவராமல் தமிழகம் முழுவதும் பல காதலர்களுக்கு ஓர் அசிங்கமான அவமானங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட காதலர்கள் தங்கள் எதிர்காலம் கருதியும், வெளியுலக அவமானங்களுக்குப் பயந்தும் மௌனம் காப்பதால் ஊர் ஊருக்கு ஒரு வக்கிர கும்பல் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டேயிருக்கிறது. என்னதான் விஷயம்? தொடர்ந்து படியுங்கள்.

காதலர்கள் என்றாலே பெரும்பாலும் அவர்கள் சந்திக்க விரும்புவது தனிமையான இடங்களிலேயே. இதில் பீச், பார்க் என்று பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் பகல் நேரங்களில் சந்திக்கும் காதல் ஜோடிகள் பெரிதாய் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சில காதல் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பே எல்லை மீறிய உடற்கவர்ச்சியால் லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் இன்னும் சிலர் ஊருக்கு ஒதுக்குப்புறமான முட்புதர்களிலும் தனிமைக்காக ஒதுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்களை குறி வைத்துத்தான் விதவிதமான கொடூரக் கும்பல்கள் நடமாடத் தொடங்கியிருக்கின்றன. என்னதான் நடக்கிறது அப்படி?

ஊருக்கு ஒதுக்குப்புறம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு வெளியில் அதிகம் ஆள்புழக்கமின்றி இருபுறமும் புதர்கள் மண்டிய சாலைகள் இருக்கும். இது பெரும்பாலும் தமிழகம் முழுவதும் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். உதாரணமாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் புறநகர்ப் பகுதிகளின் நூறடிச் சாலையும், சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் மகாபலிபுரம் சாலையுமே இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஒருசில வாலிபர்களின் கூட்டமே இது போன்ற வக்கிரங்களை அரங்கேற்றுகிறது.

ஒரு சில காதல் ஜோடிகள் பீச்சும், பார்க்கும், சினிமாத் தியேட்டர்களும் ஒரு எல்லைக்கு மேல் உதவாதென்பதால் எல்லை மீறுவதற்கு வசதியாக இது போன்ற புறநகர்ப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலும் முன்னமே காதலன் மட்டும் தனியாக வந்து இது போன்ற சாலைகளை நோட்டமிட்டு இடத்தை தேர்வு செய்து கொண்டு அதன் பின்னரே தனது காதலியோடு அங்கு வருகிறார்கள். சாலைகளின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாய் வண்டியை பார்க் செய்துவிட்டு தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் புதர்களுக்குள் ஒதுங்குகிறார்கள். ஆனால் ஏதாவது ஜோடி ஒதுங்குகிறதா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு அலையும் அப்பகுதி வக்கிரக் கூட்டத்தைப் பற்றி இப்படி ஒதுங்கும் ஜோடிகளுக்கு தெரிவதில்லை. அந்த வக்கிரக் கும்பல் ஷிப்ட் கணக்கில் பிரித்துக் கொண்டு இது போன்ற இடங்களை மறைவாய் நோட்டமிட்டுக் கொண்டிருப்பதே தலையாய வேலையாய் செய்து கொண்டிருப்பதால் இப்படி ஒதுங்கும் ஜோடிகளைப் பற்றியத் தகவல் உடனுக்குடன் அந்தக் கும்பலுக்கு எட்டிவிடும்.

இவ்வாறு ஒதுங்கும் காதல் ஜோடிகளை புதர்களில் ஒளிந்து கொண்டு அவர்களுக்கேத் தெரியாமல் கண்காணிப்பதே இந்தக் கும்பலின் முதல் வேலை. காதலர்கள் மெல்ல எல்லை மீறுவது இவர்களின் செல்போனில் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். காதலர்கள் தங்களை மறந்த நிலையில் லயித்திருக்கும் போது திடீரென அவர்கள் முன் தோன்றும் இந்தக் கும்பல் செய்யும் முதல் வேலை காதல் ஜோடிகளின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்வதுதான். நான்கு முதல் எட்டு பேர்வரைக் கொண்ட இந்தக் கும்பலை எதிர்த்து அந்தக் காதலனால் எதுவுமே செய்யமுடியாது. அந்தக் கும்பலின் முன் அரை நிர்வாணமாய் நிற்கும் காதல் ஜோடியில் எடுத்த எடுப்பிலேயே காதலனுக்கு நாலைந்து அடிகள் பலமாய் விழும். ‘’ஏன்டா எங்கேயிருந்துடா தள்ளிக்கிட்டு வந்தே இதை? நீ என்ஜாய் பண்றதுக்கு எங்க ஏரியாதான் கிடைச்சுதா? முதல்ல ரெண்டு பேரும் இப்படியே போலீஸ் ஸ்டேசனுக்கு நடங்கடா’’ என்று மிரட்ட ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் ‘’ஊர்ப்பஞ்சாயத்துக்கு இப்படியே நடங்கடா’’ என்று மிரட்டுவார்கள். மான அவமானத்துக்கு பயந்த காதல் ஜோடிகள் ‘’ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறோம். எவ்வளவு பணம் வேணும்னாலும் குடுத்துறோம். எங்களை விட்டுருங்க ப்ளீஸ்’’ என்று கெஞ்சத் தொடங்கினால் கொஞ்சம் மறுப்பு தெரிவித்து விட்டு பின்னர் மெல்ல வேலையை காமிப்பார்கள்.

அந்தக் காதல் ஜோடியில் பெண்ணிடம் ‘’இங்க பாரு… உங்க ரெண்டு பேரையும் நாங்க விட்டுர்றோம். ஆனா நீ எங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். இல்லை… முரண்டு பிடிச்சேன்னா இந்த வீடியோ எல்லா இடத்துலயும் பரவும். உங்க மானமும் இத்தோட போச்சு. இதுக்கு மேல நீங்க ஊருக்குள்ள தலை காட்டவே முடியாம போகும், ஒழுங்கா நாங்க சொல்ற மாதிரி நடந்துக்கோ’’ என்றெல்லாம் மிரட்டி அந்தக் காதலன் முன்பே அவளை கூட்டமாக நாசம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதையும் செல்போனில் படமெடுத்துக் கொண்டு கடைசியாய் அவர்களிடம் இருக்கும் பணத்தையும் பிடுங்கிவிட்டு துரத்திவிடுவார்கள்.

ஒரு சில ஜோடிகள் மிகவும் சிறுவயதினராய் இருக்கும் பட்சத்தில் பயத்திலேயே இந்தக் கும்பல் என்ன சொன்னாலும் கேட்டு நடப்பார்கள். சில ஜோடியில் எடுத்த எடுப்பிலேயே அடிவிழுந்தவுடனே காதலன் மட்டும் பயந்து போய் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஓடிவிடும் நிகழ்வுகளும் நடக்கும். சில ஜோடிகள் எதற்கும் அஞ்சாமல் முரண்டு பிடிக்கும் பட்சத்தில் காதலனை மூர்ச்சையாகும் அளவுக்குத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாய் கற்பழித்து அதை படமாக்கியும் கொள்வார்கள். எது எப்படியானாலும் இவர்களிடம் மாட்டும் வீடியோவுக்குப் பயந்தே எந்தவொரு காதல் ஜோடியும் இதை வெளியில் சொல்லுவதோ, இல்லை கம்ப்ளைண்ட் பண்ணுவதோ இல்லை என்பதுதான் இந்த வக்கிர கும்பலுக்கு வசதியான வாய்ப்பாகிப் போனது. இவர்களிடம் மாட்டும் ஜோடிகளில் கல்லூரிக் காதலர்கள், கள்ளக் காதலர்கள், அயிட்டத்தைத் தள்ளிக் கொண்டு வந்தவர்கள், திருமணம் நிச்சயமான காதலர்கள், சின்சியரான ஒரிஜினல் காதலர்கள் என எல்லாவித ஜோடிகளுமே அடக்கம். இவ்வளவு வக்கிரங்களை அரங்கேற்றும் இந்தக் கும்பல்கள் இறுதியாய் அந்த வீடியோக்களையும் நல்ல விலைக்கு விற்றுப் பரப்புவதுதான் கொடுமையிலும் கொடுமை. இது போன்ற வீடியோக்களில் இந்தக் கும்பலில் இருக்கும் ஒருவன் முகம் கூட இருக்காது. பாதிக்கப்படும் பெண் மட்டுமே முழுதாய் வீடியோவில் இருப்பாள்.

சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த ஒரு வீடியோப் பதிவில் நான்கு பேர் கொண்ட ஒரு வக்கிரக் கும்பல் பதினேழு வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணை புதர்களுக்குள் வைத்து சீரழித்த காட்சிகள் பதியப்பட்டிருந்தது. இரண்டு பேர் அந்தப் பெண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்வதும் ஒருவன் செல்போனில் படம் எடுப்பதும் ஒருவன் அந்தப் பெண்ணை சீரழிப்பதுமாய் மாறிமாறிச் சிதைக்கப்பட்டிருக்கிறாள் அந்தப்பெண். பார்ப்பவர்களை பதறச் செய்யும் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இது மேற்கூறிய எச்சரிக்கை சம்பந்தப்பட்ட காட்சிகளே என்பதை. அந்த வீடியோப் பதிவுகளைப் பார்த்ததும் அந்தக் கும்பலில் இருப்பவர்களை பிடித்து நிற்க வைத்து அரேபிய முறையில் அவர்களுடைய ஆணுறுப்பை அறுத்தெறிந்து தண்டனை வழங்கலாம் என்ற ஆத்திரமும் வெறியும் உண்டானாலும் நமது சமுதாயத்தில் சாத்தியமில்லையென்பதால் நம்மாலான எச்சரிக்கையையாவது செய்யலாமென்ற நோக்கத்திலேயே இந்தக் கட்டுரையை எழுத நேர்ந்தது.

சாலையோர நிகழ்வுகளைப் போலவே பீச்சிலும் இருளுக்குப் பிறகு சந்திக்கும் ஜோடிகளுக்கும் இதுபோலவே நடப்பதாக செய்திகள் தொடருகின்றன. இது போலவே லாட்ஜ்களில், காட்டேஜ்களில் தங்கும் காதல் ஜோடிகளிடமும் இதே போன்ற வக்கிரங்களை அரங்கேற்றும் கும்பல்களும் திரிகின்றது. முதல் ரகம் வேலை வெட்டியின்றித் திரியும் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் என்றால்… லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும் திரிவது இதையேத் தொழிலாகச் செய்யும் பெரிய லெவல் நெட்வொர்க் கும்பல்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லா நிகழ்வுகளிலும் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. கள்ளக்காதல் பெண்களும், அயிட்டங்காரப் பெண்களும் எப்படிப் போனால் என்ன என்று ஒதுக்கினால் கூட இதில் பாதிக்கப்படும் நல்ல குடும்பத்துப் பெண்களின் நிலைதான் மிக மோசமாகிப் போகிறது. பெரும்பாலும் இத்தகைய நிகழ்வுகளுக்குப்பின் அதில் பாதிக்கப்படும் பெண் அந்தக் காதலனால் கைவிடப்படுகிறாள். இது போன்ற நிகழ்வுகளில் உடலளவில் பாதிக்கப்படுவதோடு மனதளவிலும் வெகுவான பாதிப்புக்குள்ளாகிறாள்.

இது மட்டுமல்லாமல் காதல் என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களை மயக்கி அவர்களை வெளியே அழைத்துச் செல்வது போல் அழைத்துச் சென்று தனிமையில் அவர்களை அனுபவிப்பதோடல்லாமல் அதை வீடியோவிலும் பதிவு செய்து வியாபாரமாகவும், ப்ளாக் மெயிலாகவும் சம்பாதிக்கும் நிகழ்வுகளும் அங்கங்கே நடக்கத்தான் செய்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை கண்டறிவது கஷ்டம் எனும் பட்சத்தில் நாமே முன்ஜாக்கிரதையாக இருப்பது மட்டுமே நம்மைக் காத்துக் கொள்ளும் ஒரே வழியென்பதை ஒவ்வொரு பெண்களும் புரிந்து கொள்ளவேண்டும். காதலியுங்கள் தவறில்லை. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்திற்கு முன் எல்லை தாண்டுவதை அனுமதிக்காதீர்கள். ஒரு சில சிறு சபலத்தில் நீங்கள் அனுமதிக்கும் அது போன்றதொரு நிகழ்வு உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுபோலவே உங்கள் காதலருடனான சந்திப்புகளை முடிந்த மட்டிலும் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களிலேயே அமைத்துக் கொள்வதே எந்நாளும் சிறந்தது. எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளுக்குப் பயன்படும் செல்போனில் எப்போது கேமரா பொருத்தப்பட்டதோ அப்போதே பெண்களுக்கான பெரும் துன்பங்களும் ஆரம்பமாகிப் போயின என்பதே நிஜம்.

பெண்களே…. உஷார்! தீதும் நன்றும் பிறர் தர வாரா; உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளிலேயே…!

Thursday, May 19, 2011

நாதாறிப்பயலுக...! – ஒரு அப்பன்காரனின் புலம்பலும் அடாவடிப்பயலின் பதில்களும்!


இன்னைக்கு 18 லயிருந்து 25 வயசு ரேஞ்சுல ஊருக்குள்ள சுத்திட்டிருக்கிற பல நாதாறிப் பயலுகளோட அப்பன்காரன் மனசுல காத வச்சு கேட்டீங்கன்னா இதாங்க அவங்களோட ஹா(ர்)ட் புலம்பல்ஸா இருக்கும். அதுக்கு அவங்க புள்ளைங்க ரியாக்சன் என்னென்றதும் பக்கத்துலயே இருக்குங்க!

"மவனே… ஒருவொரு செமஸ்டருக்கும் விதவிதமா பேரு சொல்லி காலேஜ்ல கட்டணும்னு என் காசெல்லாம் புடுங்குறியேடா… இந்த ஐடியாவெல்லாம் நீ மட்டும்தான் தனியா யோசிக்கிறியா? இல்ல… ஒரு கும்பலாத்தான் கும்மியடிக்கிறீங்களான்னு தெரியலியே?"

("அய்யே… நீ மட்டும் யோக்கியமாவா இருந்துருக்கப்போறே. நீ படிக்கும் போதும் இதெல்லாம் பண்ணியிருக்கத்தான் செஞ்சிருப்பே. அப்படியில்லைன்னா நீ சரியான பழமா இருந்திருப்பே. அதுக்கு நான் என்ன பன்றது?")


"ஒவ்வொரு செமஸ்டர் ரிசல்ட் வரும்போதும் எத்தன பேப்பர் பாஸுன்னு மட்டும் சொல்றியே… ஒரு வாட்டியாவது எத்தன பேப்பர் ஃபெயிலுன்னு சொல்றியா? செமஸ்டர்ல ஆறு பேப்பர் ஃபெயில்னு சொல்றதவிட ‘’இரண்டு பேப்பர் பாஸுப்பா’’ன்னு சொல்ற டெக்னிக்க எங்கடா கண்டுபுடிச்சீங்க?"

("அடடடடா… எவன்தான் இந்த எக்ஸாம், ரிசல்ட் இதெல்லாம் கண்டுபுடிச்சான்னு தெரியலியே… மவனே அவன் மட்டும் என் கைல மாட்டுனான்… சங்குதான்டி!")


"மார்க்கெட்ல புதுசு புதுசா வர்ற செல்போனப் பாத்துட்டு, அப்பப்போ என் காச புடுங்கி உன் செல்போன மாத்திக்கிறியே?... அதே மாதிரி உருப்படாத உதவாக்கரை புள்ளைய மாத்துறதுக்கும் ஏதாவது வழியிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?"

("அதே ஃபீலிங்ஸ்தான் இங்கேயும். செல்போன வேணா காசு போட்டு அப்பப்போ மாத்திக்கலாம். ஆனா உன்ன மாதிரி புலம்பல் கேஸ மாத்துறதுக்கு ஒரு வழியும் இல்லாமப் போச்சேப்பா…சே!")


"நீ வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வரும்போதெல்லாம் வாயில போட்டிருக்கிற சுயீங்கம், சிகரெட்ட விட அது வாசனையை மறைக்க நீ வாங்குற சாக்லெட்டும், பபிள் கம்மும்தான் அதிக செலவாகுதுன்னு சொல்லாம சொன்னாலும், விட்டா வீட்டுக்குள்ளயே பிடிப்பேயோன்னு பயத்துல தெரியாத மாதிரியே நடிக்க வேண்டியிருக்கே… முடியலடா டேய்!"

("ம்ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் அய்யாகிட்ட!")


"ஒவ்வொரு வாட்டியும் உன் செல்போன்ல நீ பொண்ணுங்களோட மணிக்கணக்கா குசு குசுன்னு பேசும் போதும் உருப்படாதபய உன்ன விட, என் பொண்ண காலேஜ்க்கு அனுப்புறத நெனச்சாதான்டா பயம்மாயிருக்கு!"

("அய்யே… உன் பொண்ணு காலேஜ்க்கு போயித்தான் கடலை போடப்போவுதுன்னு நம்பிக்கிட்டு இருக்கிறியாக்கும். எந்தக் காலத்துலப்பா இருக்கே இன்னும் நீ? ஒரு வாட்டி உன் பொண்ண ஸ்கூல்ல போயிப்பாரு. அப்புறமா நீ இப்படியெல்லாம் பயப்படவேண்டியதே இருக்காது…நான் கியாரண்டி!")


"நீ கோக் குடி. பிஸ்ஸா தின்னு. சினிமாவுக்குப்போ. நான் கேக்கமாட்டேன்டா. ஆனா எனக்கே தெரியாம என் பாக்கெட்ல இருந்து காச ஆட்டயப் போட்டுறியே. கடன்காரப்பய நீ பன்ற வேலைக்கு எத்தன இடத்துல நான் பாக்கெட்ல கைய வுட்டுட்டு பல்லிளிச்சு கடன் சொல்லிருக்கேன் தெரியுமாடா?"

("என்னா பண்ணச் சொல்றே என்னை? இப்போ இவ்ளோ வாயக் கிழிக்கிறியே?... என்னிக்காவது கேட்டவுடனே கிராஸ் கொஸ்டின்ஸ் பண்ணாம காசக்குடுத்திருக்கியா நீ?")


"என் துட்ட எப்படியெல்லாம் ஏமாத்துனாலும் பரவாயில்ல. ஏதோ படிச்சு முடிச்சு டிகிரி வாங்கிட்டு வந்தா சரின்னுதானடா கம்முனு இருந்தேன். இப்போ என்னடான்னா கை நிறைய அரியர்ஸோட காலேஜ் முடிச்சிட்டு வந்திருக்கியேடா… உருப்புடுவியாடா நீ?"

("அதெல்லாம் உனக்குப் புரியாதுப்பா… அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்னு கேள்விப்பட்டதில்ல நீ? டோன்ட் வொர்ரி. அதெல்லாம் யாரைப் புடிச்சி எப்படிக் கிளியர் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.")


"ஏன்டா.. நீ சம்பாதிச்சு எனக்கு குடுக்காட்டாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் உன் வாழ்க்கைய நீ பாத்துக்க வேண்டாமாடா?"

("உலகத்திலேயே ஃப்ரியா கிடைக்கிறது அட்வைஸ் ஒன்னுதானாம்… சீக்கிரம் கிளம்புப்பா… காத்து வரட்டும்.")


"வேலைக்கு போகாட்டாக் கூடப் பரவாயில்லடா… ஆனா நான் வேலைக்குப் போற டைம் வரைக்கும் கூட பெட்ல இருந்து எழுந்திரிக்காம தூங்கிட்டிருக்கியே… நல்லாவாடா இருக்கு? காலைல எழுந்திச்சு வீட்டுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணாலாமேடா?"

("சேச்சேச்சே.. இந்த வீட்டுல மனுசன் நிம்மதியா தூங்கக்கூட முடியல… எப்போ பாரு… நொய்யிநொய்யின்னு. முதல்ல வேலைக்குப் போன உடனே தனியா ஒரு ரூம் பாத்துப் போயிடனும்.")


"தண்ணியடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் இல்லாம, கேட்டா… வெறும் பீர்தான்ப்பா குடிச்சேன்… இதெல்லாம் ஒரு தப்பான்னு கேக்குறியே… நாளைக்கு உன்புள்ள இப்படி பண்ணும் போதுதான்டா தெரியும் உனக்கு."

("அய்யே… சும்மா புலம்பாத. பீரெல்லாம் கூல்ட்ரிங்க்ஸா மாத்தி ரொம்ப நாளாவுது. அதுமட்டுமில்ல… நாளைக்கு என் பையன்லாம் வளந்த உடனே, உன்னமாதிரியெல்லாம் இல்லாம நானே அவனுக்கு ஊத்திக் குடுத்து அவன் கூட உக்காந்து சாப்பிடுவேன். அப்போ வந்து பாரு… ஒரு அப்பான்னா எப்படியிருக்கனும்னு காட்டுறேன் உனக்கு.")


"இன்னும் சொந்தக் கால்லயே நிக்கல. அதுக்குள்ள யாரோ ஒரு பொண்ண லவ் வேற பண்றியாடா? உன்னச் சொல்லித் தப்பில்லடா. உன்னயும் நம்பி ஒருத்தி லவ் பண்றா பாரு… அவளைச் சொல்லனும்."

("த்தோடா… உன்னயெல்லாம் நம்பி எங்க அம்மா உன்னக் கட்டிக்கலயா?. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல. வெட்டிப்பேச்சு பேசாம போய் வேலையப் பாருப்பா!")


"ம்ம்ம்ம்… இவன் எப்பதான் திருந்தப் போறானோ தெரியலியே?... ஆண்டவா கூடிய சீக்கிரம் இவனுக்கு நல்ல புத்தியக் கொடுத்து ஊதாறித்தனமா திரியறத விட்டுப்புட்டு உருப்படற வழியக் காமிங்க ஆண்டவா…!"

("வொய் ப்ளட்?... சேம் ப்ளட்!... ஆண்டவா, கூடிய சீக்கிரம் எங்கப்பன் புலம்பறத நிறுத்திட்டு என்னைப் புரிஞ்சி நடக்கிற மாதிரி பண்ணுங்க ஆண்டவா…!")


அதுனால இந்த மேட்டர்லயிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னான்னா…
அப்பன்மாருங்கல்லாம் சும்மா புலம்பறத நிறுத்திட்டு உங்க வயசுல நீங்க என்னெல்லாம் பண்ணுனீங்கன்னு ஒரு ஃப்ளாஸ்பேக் ஓட்டிப் பாத்தீங்கன்னா, உங்க பையன் பண்றதெல்லாம் இந்தக் காலத்துல ஒரு விஷயமே இல்லன்னு புரிஞ்சிப்பீங்க. அது மட்டும் இல்லீங்க… இன்னக்கி இருக்கிற பசங்கெல்லாம் ஒரு வயசு வரைக்கும் ஊதாறித்தனமா சுத்துனாலும் அவங்களா அவங்க வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகும் போது உங்களவிட ஒருபடி மேலேயே நிச்சயமா செட்டில் ஆவாங்கன்றதுக்கு இன்னக்கி எத்தனயோ பசங்க உதாரணமா இருக்காங்க. அதனால சும்மா நாதாறிப்பய, ஊதாறிப்பய, உருப்படாதப்பய, தெண்டச்சோறு அப்பிடின்னுலாம் சொல்லிட்டு இருக்காம உங்க புள்ளைங்கள நல்லாப் புரிஞ்சிக்கிட்டு அவங்க வாழ்க்கைய அவங்க வழியில வாழ விடுங்க…!

அதே மாதிரிதான் எல்லாப் புள்ளைங்களுமே அவங்கங்க அப்பன எதிரியாப் பாக்காம, அவங்க என்ன செஞ்சாலும் உங்க மேலயிருக்கிற பாசத்துனாலதான்றத புரிஞ்சிக்கிட்டு, நீங்களே இப்பிடின்னா… உங்க அப்பா எப்படின்னு ஒரு நிமிஷம் யோசனை பண்ணி, பெரியவங்க பேச்சக் கேக்கலைன்னாலும் பரவாயில்ல… ஆனா அவங்க மனச கஷ்டப்படுத்தாம, அவங்க பாசத்த அலட்சியப்படுத்தாம வாழ ட்ரை பண்ணுங்க.

உங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ண நான் ஒன்னும் கருத்து கந்தசாமி இல்லைங்க…! ஏதோ மனசுல பட்டுச்சு…சொன்னேன். அம்புட்டுதேன்!

Wednesday, May 18, 2011

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரண்டு இமாலயத் தவறுகள்...


மே18 நிகழ்வால் தமிழ் தேசியக் கனவுகளை தகர்த்தெறிந்ததாக நினைத்து இனவாத இலங்கை அரசு வேண்டுமானால் கொக்கரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பழி வாங்கி விட்டதாக மகிழ்ச்சியடைந்தால் இந்திய அரசு தான் செய்த இமாலயத் தவறுகளை இன்னமும் புரிந்து கொள்ளாததாகவே அர்த்தமாகிப்போகும்.

இலங்கை விவகாரத்தைப் பொருத்தவரை இந்திராகாந்திக்குப் பிறகு அதை சரியான ராஜதந்திரத்தோடு அணுகிய தலைவர்கள் இந்திய அரசியலில் எவருமில்லை என்பதே நிஜமாகும். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாய் அமெக்காவிற்கே அடிபணியாமல் விளங்கிய இந்திரா இலங்கை விவகாரத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுடனே விளங்கியது ஏன்?
இந்தியா ஒரு தீபகற்ப நாடென்பது நாமெல்லோரும் அறிந்ததே. இயற்கையாகவே நாம் வடக்கே இமய மலையையும் மீதி மூன்று திசைகளிலும் கடற்பரப்பையும் நமது நாட்டுக்குப் பாதுகாப்பாய் அமையப் பெற்றிருக்கிறோம். தெற்கு ஆசியாவையும், இந்தியாவையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் எந்த நாடுகளுக்கும் சரி… இந்தியாவை போர் பய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் நாடுகளுக்கும் சரி… தெற்கு பகுதியில் அவர்களின் படைத்தளத்தை நிறுவ ஒரு நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அவ்வாறான நிலப்பரப்பு?… அது இலங்கை மட்டுமே!
நீண்ட காலமாகவே அமெரிக்கா தனது படைத்தளத்தை இலங்கையில் நிறுவ பெருமுயற்சி எடுத்து வருவதே இதற்கான சாட்சி. இலங்கையின் சென்ற தேர்தலில் கூட ராஜபக்சேவிற்கு எதிராக பொன்சேகா களமிறங்கியதே அமெரிக்காவின் கைங்கரியத்தில்தான். ஒருவேளை பொன்சேகா அந்தத் தேர்தலில் ஜெயித்திருந்தால் இந்நேரம் அமெரிக்காவின் படைத்தளம் இலங்கையில் நிறுவப்பட்டிருக்கும். அவ்வாறு நிறுவப்பட்டிருப்பின் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல… வேகமான வளர்ச்சியில் அமெரிக்காவையே மிஞ்சிக் கொண்டிருக்கும் சீனாவுக்கும் அது மிகப்பெரிய செக் பாயிண்ட்டாய் அமைந்திருக்கும். சரி… அதான் பொன்சேகா தோத்துட்டாருல்ல… அப்புறம் என்ன பிரச்சின? அப்படின்னு கேட்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் கட்டுரையை மேற்கொண்டு படிக்கவேண்டும்.

மேற்கூறிய இந்திய தேசிய பாதுகாப்பு விஷயம் கருதியே இந்திராகாந்தி இலங்கை மண்ணில் எவரையும் கால் பதித்து விடாதபடி செய்யும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் விளங்கினார். ரஷ்யாவுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவையே ஒரு சமயம் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடத் தகுதியில்லை என்று மூக்கறுத்த இந்திரா காந்தியின் இரும்புக் கரத்துக்குள் இலங்கை அரசுகள் கொஞ்சம் பயத்துடன் அடங்கியேக் கிடந்தன. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு ஏதேனும் நிலைப்பாட்டை எடுத்தால் இந்தியா உடனடியாக விடுதலைப் புலிகளுக்கு உதவி தனி ஈழம் அமைத்துக் கொடுக்கும் என்ற ராஜதந்திரத்தையே இந்திராகாந்தி இலங்கை அரசுகளுக்கு எதிராகக் கையில் வைத்திருந்தார்.
தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்திராவின் அகால மரணம்தான். இந்திராவும், எம்.ஜி.ஆரும் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடிருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்பதை நிச்சயமாக மறுப்பதற்கில்லை.

இந்திராவின் மரணத்துக்குப் பிறகு இந்திய ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜீவ் காந்தியே தற்போதைய மே18 நிகழ்வு வரை அனைத்து விஷயங்களுக்கும் காரணகர்த்தாவாகும். ராஜீவ் காந்தியைக் கூட பெரிதாய்க் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் ராஜீவ் காலத்திலிருந்துதான் மலையாளிகள் தமிழர்களின் வாழ்வில் விளையாடத் துவங்கினார்கள். எப்போதுமே தமிழர்கள் மலையாளிகளை எதிரியாகவோ, வெறுப்பாகவோ, இழிவாகவோ பார்ப்பதில்லை. ஆனால் இன்று வரை மலையாளிகளுக்கு தமிழன் என்றால் ஒரு வெறுப்பு, இழிவு, பகை என்று அவர்கள் உள் மனதினில் எதனால் வஞ்சம் ஏற்றிக் கொண்டார்களென்று தெரியவில்லை. ராஜீவ் ஆட்சியிலும் அவரைச் சுற்றியிருந்த மலையாளிகள் கூட்டம்தான் இலங்கை விவகாரத்தில் அவரைத் தவறாய் வழி நடத்தியது. அவர்களின் ஆலோசனைப்படிதான் ராஜீவ் அவருடைய மரணத்திற்கே காரணமாகிப் போன இந்தியாவின் முதல் இமாலயத் தவறான இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிய வேலையைச் செய்தார். அமைதிப்படை என்ற பெயரில் போனவர்களின் அத்துமீறல்கள் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சகோதரிகளின், தாய்மார்களின் கற்பைச் சூறையாடியது தமிழ் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் பெயர் மீது அழிக்க முடியாதக் கரையாய்ப் படிந்து போனது. ராஜீவ் காந்தியின் வார்த்தையையும், அமைதிப் படையையும் நம்பி ஆயுதங்களைக் கீழே போட்ட விடுதலைப் புலியினர் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு தங்கள் சகோதரிகளின், தாய்மார்களின் கற்பு பறிபோன கொடூர நிகழ்வுகளுக்கு பழிவாங்கும் விதமாக ராஜீவ் காந்தியின் படுகொலையையும் அரங்கேற்றினர்.(விடுதலைப்புலிகளின் இந்த மாபெரும் தவறுதான் உலக ரீதியில் அவர்களுடைய பின்னடைவுக்கு மிக முக்கியக் காரணமாகிப் போனது. அதே போல் விடுதலைப் புலிகளின் மற்றொரு தவறாய் நான் நினைப்பது கடைசியாய் நடந்த போரில் அவர்கள் பயன்படுத்திய போர் யுத்திகள்தான்.
அவர்களுடைய இறுதிக் கட்டப் போர் வரை தங்களிடம் இருந்த நீர்மூழ்கிக்கப்பல், போர் விமானங்கள், ராட்சத குண்டுகள் என எதையுமே பயன்படுத்தாமல் இலங்கைப்படைகள் ஒவ்வொரு நகரமாய் வீழ்த்த வீழ்த்த பெரிதாய் எதிர்ப்புகள் ஏதும் காட்டாமல் பின் வாங்கிப் போனதன் ரகசியம்தான் இதுவரை ஏனென்று தெரியவில்லை…!)

அதற்கு பின் வந்த அரசுகளில் சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசே இந்தியாவின் இரண்டாவது இமாலயத் தவறை அரங்கேற்றியிருக்கிறது. அமைதிப் படையை அனுப்பி தமிழர்களைச் சிதைத்தது முதல் தவறென்றால் இப்போது இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்து தனித் தமிழீழக் கனவுகளைச் சிதைத்ததோடு இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கும் கேள்விக் குறியை உருவாக்கி தனது இரண்டாவது இமாலயத் தவறை அரங்கேற்றியிருக்கிறது இந்தியா.
சோனியா காந்தி தனது கணவரின் மரணத்துக்குப் பழிவாங்கும் செயலாகத்தான் இலங்கை அரசுக்கு உதவினாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த கேள்வி. (எனக்குக் கூட சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம்! எப்படி ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது அவரும், அவருடைய மெய்க்காப்பாளர்களும், சில போலீஸ்காரர்களும், பொது மக்களும் மட்டுமே இறந்து போயினர். ஒரு கட்சியின் தேசியத் தலைவர் தமிழகத்தில் வந்து குண்டு வெடிப்பில் சிக்கி இறக்கும் நிகழ்வில் எந்தவொரு அரசியல்வாதியும் அவருடன் நடந்து சென்று இறந்து போனதாய்ச் செய்திகள் இல்லாத மர்மம்தான் என்ன? இதையும் சோனியாகாந்தி கொஞ்சம் புலனாய்வு செய்து கண்டுபிடித்துச் சொன்னால் எனது நீண்ட நாளைய சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்!)

இந்தியா உதவ வில்லையென்றால் இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் கைகோர்ப்போம் என்று இந்தியாவையே மிரட்டத் துணிந்து, போரின்போது பாகிஸ்தானிடம் உதவி கேட்டு ஓடியது இலங்கை அரசு. இன்றைய சூழலில் வளர்ந்து வரும் சீனாவுக்கு உலக அளவில் நிகரான ஒரே போட்டியாளர் இந்தியா மட்டும்தான். இன்றில்லையென்றாலும் ஆசியப் பிராந்தியத்தில் என்றாவது எதிர்காலத்தில் சீனாவை மிஞ்சும் வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டென்பதை சீனாவும் அறிந்து வைத்துள்ளது. நமது இராணுவ ஜெனரல் அளத்திருந்த ஒரு பேட்டியில் ‘’சீனா தனது எல்லை முழுவதிலும் சாலை வசதிகளையும், இராணுவத் தளவாடங்களையும் மேம்படுத்தி வைத்துள்ளது. தற்போதைய சூழலில் சீனா நம் மீது படையெடுத்தால் 35 நிமிடங்களுக்குள் சீனப்படைகள் டெல்லி வரை வந்து விடும். ஆனால் நமது எல்லையோர சாலை வசதிகளின்படி நமது இராணுவத் துருப்புகள் எல்லையைச் சென்றடையவே 36 மணி நேரங்களுக்கு மேலாகும்’’ என்று கூறியிருந்ததைப் பற்றி இன்றளவும் விவாதிக்கவும், கவலைப்படவும், நடவடிக்கையெடுக்கவும் எவருமில்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டமே. இந்தச் சூழலிலும் சோனியா காந்தியின் அரசு இலங்கையிடம் பாகிஸ்தானையோ, சீனாவையோ அண்டவிடாதுச் செய்யும் ராஜதந்திரமாக நினைத்து இலங்கைக்கு அவ்வளவு உதவிகள் செய்தும் இன்றளவும் இலங்கை அரசு இந்தியாவை மதிக்காமல் சீனாவின் வால் பிடித்துக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரிலும் தமிழர்களைப் பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு தவறான ராஜதந்திர வழிகாட்டுதல்களை நடத்தியது மலையாளிகளின் கூட்டமே. இன்று சீனா மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்களை இலங்கையில் குவித்திருக்கிறது. என்ன செய்யப் போகிறது இந்தியாவின் ராஜதந்திரம்?. ஒரு சிலரின் சொந்த விறுப்பு வெறுப்புகள் மற்றும் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காக நமது நாட்டின் தென் திசைப் பாதுகாப்புக்கு ஆப்படித்தாகிவிட்டது.

இனி என்ன செய்தும் பலனில்லை. இனவாத இலங்கை அரசு சீனாவின் தைரியத்தில் இந்தியாவை மதிப்பதில்லை. இலங்கைக்கு ஏதாவது செக் வைக்கலாமென்றால் விடுதலைப் புலிகளும் இன்றில்லை. விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால் எப்போதோ அமெரிக்காவின் ஆயுத உதவியோடு தனி ஈழம் அமைத்துக் கொண்டு அதற்கு கைமாறாக அமெரிக்காவின் படைத்தளத்தை தமீழீழத்தில் நிறுவ அனுமதி கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான காரியத்தை ஒரு போதும் செய்வதில்லை என்று அமெரிக்காவின் உடன்படிக்கையையே மறுத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களுக்கு இருந்த அக்கறை கூட நம் சொந்த நாட்டின் பாதுகாப்பின் மீது நம் அரசுக்கு இல்லாமல் போய் சில தவறானவர்களின் வழிகாட்டுதலால் இரண்டு இமாலயத் தவறுகளைச் செய்து விட்டு இப்போது சிறிலங்கா என்ற குட்டி நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

காலம் என்ன பதில் சொல்லப் போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….!

Tuesday, May 17, 2011

காதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா? இல்லையா?...


ரொம்ப நாளாவே நிறைய பேரக் கன்ஃப்யூஸ் பண்ணிட்டு இருக்கிற ஒரு விஷயம் இன்னான்னா… காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா? இல்லை… வூட்டுல பாத்து கட்டி வைக்கிறதுதான் நல்லதா? அட… இன்னாடா இது, கொஞ்சம் உள்ளாரப் பூந்துதான் பாத்திரலாம்னு கிளம்புனேங்க!

முதல்ல காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிட்டு இப்போ ஆட்டோ ஓட்டி பொழப்ப ஓட்டிக்கினு இருக்கிற நம்ம தோஸ்து திருவாளர் ஒருத்தர் வீட்டுக்கு போனேன். என்னப் பாத்ததும் ‘’டேய் மச்சான் நல்லாயிருக்கியாடா?’’னு வாசலுக்கு வந்து கட்டிப்புடிச்சி வூட்டுக்குள்ள கூட்டிக்கினு போனான். சொல்லிக்கிற மாதிரி எந்தப் பொருளும் இல்லாத அவன் வாடகை வீடும், கார்ப்பரேஷன் ஸ்கூல் யூனிபாரம்ல இஸ்கூலுக்கு ரெடியாயிட்டிருந்த அவன் கொயந்தைங்களும், ‘’ஏய்… என் பிரண்டு வந்திருக்கான்..காப்பி எடுத்தாடீ…’’னு அவன் விட்ட சவுண்டுக்கு அவன் பொண்டாட்டி திருமதி விட்ட ஒரு தீப்பொறி லுக்கும்… யப்போவ், காதலிச்சு கட்டிக்கிறது கொஞ்சம் டேஞ்சர்தானா?

நம்ம திருவாளர்கிட்ட தொயர்ந்து பேசுறதுக்கு முன்னாடி அவரு ஃப்ளாஸ்பேக் இன்னான்றத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனுங்க. ஒன்ஸ் அப்பான்ய டைம்… லாங் லாங் யகோ… நம்மாளு திருவாளர் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி. காலேஜ் படிச்சினு இருக்கச்சே நம்ம திருமதி ஸ்கூல் யூனிபாரம்ல கும்முனு போனத பாத்து ஆசப்பட்டு லவ்விட்டாரு.
அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க வேற வேற சாதின்றதும் திருமதி ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலின்றதும். ஆனாலும் காதலுக்குத்தான் கண்ணில்லைனு எந்தக் கபோதியோ சொல்லிட்டான்னு நம்மாளு திருவாளர் அவ இல்லன்னா நான் செத்துருவேன்டான்னு சொல்லி
ரெண்டு வூட்டுக்காரங்களையும் எதிர்த்து திருமதியை தள்ளிக்கினு போயி ரெஜிஸ்டர் கண்ணாலம் கட்டிக்கினாரு. நாங்களும் ப்ரெண்ட்ஸெல்லாம் போயி கண்ணாலத்த பண்ணி வச்சிட்டு கையில இருந்த காச மொய்யா குடுத்துட்டு வந்தோம். அந்தக் கண்ணாலத்துக்கு கையெழுத்து போட்ட கோஷ்டில அடியேனும் ஒருத்தன். கண்ணாலத்துக்கு அப்புறம் காலேஜ பாதிலயே விட்டுப்புட்டு ஆட்டோ ஓட்டுற பொழப்புல இறங்கிட்டாரு நம்ம திருவாளர்.

காப்பிக்கு விட்ட லுக்குல மெரிசலாயி நின்னுட்டிருந்த என்ன நம்ம திருவாளர்தான் உலுக்கி ‘’ டேய்… இன்னாடா அப்பிடியே நின்னுட்ட? வா.. நாம வெளிய போயி காப்பி குடிச்சினு வரலாம்’’ னான். ரெண்டு பேரும் பேசிக்கினே பக்கத்து தெரு காப்பி கடைக்கு மொள்ள நடந்தோம். நான்தான் மொள்ள கேட்டேன்… ‘’மச்சான் எப்படிடா போயிட்டிருக்கு லைஃப்?’’
அவன் மெல்ல சிரிச்சிக்கிட்டே ‘’அதான் பாத்தேல்ல?’’ னான்.

ஏன்டா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிதானடா கண்ணாலம் கட்டிக்கினிங்கோ? அப்பிடியும் சந்தோஷமா இல்லாம இன்னாடா பிரச்சன உங்களுக்கு?

மச்சான் அன்னிக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கெயெழுத்த வச்சிட்டு நீங்கல்லாம் போயிட்டீங்கடா. காதலிக்கற வரைக்கும் தெரியலடா கஷ்டம்னா என்னான்னு? எப்போ அவ கழுத்துல தாலியக் கட்டுனேனோ அப்போ ஆரம்பிச்சுதுடா என் வாழ்க்கைல ஏழரை. மாலையும் கழுத்துமா போயி நின்னவங்கள கொஞ்சம் வசதியான எங்க வூட்டுலயும் ஏத்துக்கல. வசதியில்லாத அவுங்க வூட்டுலயும் ஏத்துக்கல. அப்புறம் இன்னா பண்றது? காலேஜ பாதிலயே வுட்டேன். எவன் எவன் கைல கால்லலாமோ வுயுந்து வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுனேன். கண்ணாலம் ஆயி இத்தினி வருஷம் ஆயிடுச்சு. ஒன்னுக்கு ரெண்டு புள்ளங்களையும் பெத்தாச்சு. இன்னும் இந்த ஆட்டோவக்கூட சொந்தமா வாங்க முடியலடா மச்சான்.

ஏன்டா காதல்ல காசு முக்கியமில்ல.. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்ட அன்புதான் முக்கியம்னு நீதானடா சொன்ன?

அது காதலிக்கும் போது சொன்னது மச்சான்… எங்கப்பன் எவ்வளவோ சொன்னான். வேணான்டா இந்த வயசுல வர்றது காதல் இல்ல. ஃபர்ஸ்ட் ஒயுங்கா படிச்சி டிகிரிய முடிடான்னு. கேட்டனா நானு? வாழ்க்கைல காசு இல்லாங்காட்டி காதலிச்சுக் கட்டிக்கிட்டவளே காரித்தாண்டா துப்புறா…! எங்கப்பன் பேச்சக் கேட்டு டிகிரிய ஒயுங்கா முடிச்சிருந்தாக்க இன்னக்கி இப்படியொரு பொயப்பு இருந்திருக்காது.

ஏன்டா காதலிச்சுக் கட்டிக்கிட்ட பொண்டாட்டி, அழகான ரெண்டு கொயந்தங்க, ஏதோ ஆட்டோ ஓட்டி கொஞ்சம் வருமானம், அமைதியான வாழ்க்க… இதுக்கு மேல இன்னாடா வேணும் ஒரு மனுஷனுக்கு?

அடப்பாவி.. நீயுமாடா புரியாமப் பேசற? கூழோ, கஞ்சோ அது வூட்டுல பாத்து கட்டி வச்சிருந்த பொண்ணாயிருந்தாக்க மெய்யாலுமே நிம்மதியாக் குடும்பம் நடத்தலாம்டா… ஆனாக் காதலிச்சிக் கண்ணாலம் கட்டிக்கிட்டோம்னா காசு இல்லாம நிம்மதியா வாழவே முடியாதுடா. கண்ணாலம் ஆன கொஞ்ச நாள்தான் மச்சான் சந்தோஷமெல்லாம். ஆரம்பத்தில அவளும் காசு பணம் இல்லாட்டியும் பரவாயில்லிங்க. நாம எப்பவுமே ஒருத்தருக்கு ஒருத்தர் இதே அன்போடவே இருக்கனும்னுதான் சொன்னாடா. ஆனா போகப்போக வாழ்க்க மாறிடுச்சி மச்சான். வூட்டு வாடகை, கரண்ட் பில், மளிகச் சாமான், துணிமணிங்க, மருந்து மாத்திரனு காச நகட்டாம துரும்பக்கூட அசைக்க முடியாதுடா இங்க. ஒருவொரு பிரசவத்துக்கும் நான் பட்டேன் பாருடா அவஸ்த… மச்சான் பிரசவத்தப்போ ஆஸ்பத்திரில அவளப் பாத்துக்கவும் யாருமேயில்ல. காசில்லாத எங்களுக்கு அங்க மரியாதைனும் எதுவுமே இல்ல. எப்படியோ பிரசவம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா அவளுக்கு ஆரத்தி எடுக்கக்கூட யாருமில்லாம அவ அழுதா பாருடா ஒரு அழுக… அப்போதான்டா தெரிய ஆரம்பிச்சது பெரியவங்கள எதுத்து கண்ணாலம் கட்டிக்கிறது எவ்ளோ தப்புன்னு… பெரியவங்க துணயில்லாம பச்சக் கொயந்தய வளக்கிறதுக்கு அவ பட்ட பாடிருக்கே.. அப்போதாண்டா கொஞ்ச கொஞ்சமா அவளுக்கும் இந்த வாழ்க்கைல வெறுப்பு வந்திடுச்சி.

ஏன்டா… காசு பணம் இல்லன்னாலும் நம்மல ஏத்துக்காதவங்க முன்னாடி நாம மானத்தோட நல்லா வாழ்ந்து காட்டனும்னு வைராக்கியம் எடுத்துக்கலாம்ல நீங்க ரெண்டு பேருமே?

அடப்போடா… எப்போ எங்க கொயந்தக்கு பால் பவுடர் வாங்கக்கூட காசில்லாம கஷ்ட ஜீவனமாச்சோ அப்போவே வெறுத்திடுச்சிடா எல்லாம். அதுக்கப்புறம் டெய்லி ரெண்டு பேரும் ஏதோ வாழ்க்கைய சுவாரசியம் இல்லாம நகத்துறோம். ரெண்டாவது புள்ளயும் பெத்தாச்சு. ஏதோ போகுதுடா வாழ்க்க…

ஏன்டா மச்சான் இப்புடிப்பேசுற? இன்னாதான்டா சொல்றா உன் பொண்டாட்டி?

அவளச் சொல்லியும் குத்தமில்ல மச்சான். நான் ஆட்டோ எடுத்துக்கினு பொயப்ப பாக்கப் போயிறேன். வீட்டுக்கு வர்ற கடன்காரன்கிட்டல்லாம் அவதான வாங்கிக் கட்டுறா? அந்தக் கோவத்தெல்லாம் என்கிட்டதான காமிக்கனும். வூட்டு வாடக, பால் காசுன்னு எதையுமே டைமுக்கு குடுக்க முடியிறது இல்ல. பசங்கள கூட கார்ப்ரேஷன் ஸ்கூலுக்குதான்டா அனுப்புறேன். வூட்டுல தினம் தினம் சண்டதான்டா. என்ன பன்றது பெரியவங்க பாத்து கட்டி வச்சிருந்தா அன்பு, ஆறுதல், ஆலோசனை, அரவணைப்பிலயும் சரி, பொருளாதார ரீதியிலயும் சரி எப்பவுமே அவங்க பக்கபலமா நின்னிருப்பாங்க. இப்ப எங்க கொயந்தங்க பாட்டி தாத்தா கூடத்தெரியாம வளருத நினைச்சா கஷ்டமாத்தான்டா இருக்கு. அது மட்டுமாடா… என்ன பிரச்சினன்னாலும் லவ் பண்ணும் போது மட்டும் ஹீரோ மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து என்ன ஏமாத்திட்டியே… இப்படி வக்கத்தவன்னு தெரிஞ்சிருந்தா கழுத்த நீட்டிருக்கவே மாட்டனேனு அப்பப்போ சண்ட வேற. லவ் பண்ணும் போது ஒருத்தருக்கொருத்தர் ஒரு நாளைக்கு நூறு வாட்டிக்கு மேல ‘’ஐ லவ் யூ’’ சொல்லிப்போம்டா. இப்போ நாங்க ‘’ஐ லவ் யூ’’ சொல்லி பல வருஷம் ஆயிடுச்சிடா மச்சி. ம்ம்ம்ம்… என்ன பன்றது மச்சான்? நான் செஞ்ச வேலைக்கு நானேதான்டா அனுபவிக்கனும். காதல் வேற, வாழ்க்க வேற மச்சான்…எல்லாம் விதி.
காப்பியக் குடிச்சுட்டு பர்சிலிருந்த ஒரு ஐநூறு ரூபாத்தாள எடுத்து அவன் வேண்டாம்னு சொல்லச் சொல்ல கொயந்தங்களுக்கு ஏதாவது வாங்கிக் குடுடானு சொல்லி அவன் கையில திணிச்சிட்டு அவன்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

அட… அப்போ லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிறது வேஸ்ட்டுதானா?... யோசன பண்ணிக்கினே என்னோட வூட்டுக்கு வந்தேன். அன்னக்கி பூரா என் மண்டய குடஞ்சிட்டே இருந்துச்சு. திடீர்னு நியாபகம் வந்து அடுத்த நாள் என்னோட இன்னொரு தோஸ்தப் போயிப் பாக்கலாம்னு முடிவெடுத்தேன்.

திருவாளர் இன்னொரு தோஸ்து எட்டாங்கிளாஸ் வரை என்னோட படிச்சவன். அவங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே தினக்கூலிங்க. இவனும் படிப்பு ஏறாம எட்டாங்கிளாசோட நிறுத்திட்டு கூலி வேலைக்கு போயிட்டான். அப்புறமா அவன் அப்பா அம்மாவே ஒரு கூலிக்காரப் பொண்ண அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்போ திருவாளர் திருமதி ரெண்டு பேருமே கூலி வேலைக்கு போயி குடும்பத்த ஓட்டிக்கினு இருக்காங்க. அவங்களப்போயி பாத்திரனும்னு முடிவெடுத்துட்டு நிம்மதியா தூங்குனேன்.

அடுத்த நாள் காலைலயே எழுந்து ரெடியாகி கிளம்பிட்டேன். குப்பத்துக்குள்ள எல்லா குடிச வீடும் ஒரே மாதிரியே தெரிஞ்சிச்சு. அவன் பேரு, அவன் அப்பா அம்மா பேரு எல்லாத்தையும் சொல்லி விசாரிச்சு எப்படியோ அவன் வீட்டக் கண்டுபிடிச்சு போய் நின்னேன். முதல்ல அவன் பொண்டாட்டி திருமதிதான் என்னப் பாத்திட்டு ‘’அண்ணா வாங்கண்ணா… நல்லாயிருக்கீங்களாண்ணா? இப்போதான் எங்க ஞாபகமெல்லாம் வந்திச்சாண்ணா? உள்ள வாங்கண்ணா’’ னு பாசமாக் கூப்பிட்டா. ‘’அவரு குளிச்சிட்டுருக்கார்ணா, நீங்க உக்காருங்க… அவரு இப்போ வந்துருவார்ணா’’னு சொல்லிட்டு ஒரு பாத்திரத்த தூக்கிட்டு எங்கயோ அவசரமா கடைக்கு ஓடுனா. அவங்க பசங்க தொட்டில்ல ஒன்னுமா இஸ்கூல் யூனிபாரம்ல ஒன்னுமா வூட்டுல இருந்திச்சுங்க. அந்த யூனிபாரம பாத்தா நல்ல இங்கிலீஷ் ஸ்கூல் யூனிபாரம் மாதிரிதான் தெரிஞ்சிச்சு. அவனோட அப்பா வூட்டுக்குள்ள வந்தவரு என்னயப் பாத்திட்டு முகமலர்ச்சியோட ‘’நல்லாயிருக்கியாடா? இப்போதான் எங்க ஞாபகமெல்லாம் வந்துச்சா’’னு கேட்டாரு. ‘’இல்லப்பா… இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன். அப்படியே உங்களயெல்லாம் பாத்திட்டு போலாமேன்னுதான்’’ அப்படின்னு இழுத்தேன்.

அதுக்குள்ள குளிச்சி முடிச்சிட்டு நம்ம தோஸ்துவும் வந்திட்டான். கடைக்கு போன திருமதியும் வந்துட்டா. ‘’என்னடா மச்சான் நல்லாயிருக்கியாடா? னேன். ‘’ம்ம்ம்ம்… எனக்கென்னடா குறை. நல்லாயிருக்கேன்டா’’ னான். சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு ‘’மச்சான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்டா’’ னு சொன்னேன். அதுக்குள்ள அவன் திருமதி காப்பி கொண்டு வந்து குடுத்தா. ‘’நம்ம வூட்டுல பால் காப்பி கிடையாதுண்ணா. அதான் கடையில வாங்கிட்டு வந்தேன்’’னா. காப்பிய குடிச்சுட்டு வீட்டுக்கு வெளியே மரத்தாண்ட போயி நானும் தோஸ்துவும் உக்காந்தோம். ‘’அண்ணா, இன்னக்கி நீங்க நம்ம வூட்டுல நாஸ்தா பண்ணிட்டுதான் போனும்’’னு அவன் திருமதி சொன்னத காதில வாங்காம நம்ம தோஸ்து திருவாளர்கிட்ட பேச்ச ஆரம்பிச்சேன்.

மச்சான், உன் அப்பா அம்மா பாத்து கட்டி வச்ச போண்ண கட்டிக்கிட்டயே… லைஃப் எப்படிடா போது?

ஒரு குறையும் இல்லடா மச்சான். பாத்தேல்ல… அன்பான பொண்டாட்டி, கூடவே துணையா அப்பா அம்மா, ரெண்டு பசங்க எல்லாமே கடவுள் நல்லாத்தாண்டா குடுத்திருக்காரு.

கொயந்தய பாத்தா ஏதோ கான்வெண்ட்ல படிக்கிறமாதிரி தெரியுது. மாசாமாசம் எப்பிடிடா இஸ்கூல் பீஸெல்லாம் கட்டுறே?

நான் கூட கார்ப்பரேஷன் இஸ்கூல்லதான் சேக்கலாம்னு சொன்னேன்டா. ஆனா அப்பாதான் நாமதான் யாரும் நல்லா படிக்காம கஷ்டப்படுறோம். நம்ம கொயந்தங்களாவது நல்லா படிச்சி பெரிய ஆளா வரனும்னு சொல்லி இந்த இஸ்கூல்லதான் சேக்கனும்னு சொல்லிட்டாருடா. அப்பா இன்னும் கூலிக்கு போறாரு. நானும் என் பொண்டாட்டியும் கூட கூலிக்குப் போறோம். அம்மா மட்டும் வூட்டுல இருந்து கொயந்தங்க, வூடு, வேலன்னு எல்லாத்தயும் பாத்துக்கிதுடா.

மச்சான் உன் பொண்டாட்டி உன்கிட்ட அது வாங்கித்தா இது வாங்கித்தான்னு எதுவும் சண்ட போடாதாடா?

இல்ல மச்சான்… அவளும் கூலிக்காரக் குடும்பம்தான? அப்பா அம்மா பாத்து கட்டி வச்சதால நம்மளுக்கு ஏத்த மாதிரி குடும்பமா பாத்து பொண்ணு எடுத்திருக்காங்கடா. அவ ரொம்ப தங்கம்டா. கூலிய கூட நேரா கொண்டு வந்து என்கிட்டயோ இல்ல அப்பாகிட்டயோ குடுத்துருவா. அவ உலகமெல்லாம் வூடும் நாங்களும்தான்டா. கண்ணாலம் ஆனதிலயிருந்து இதுவரைக்கும் ஒரு வாட்டி கூட அவ எங்கிட்ட சண்ட போட்டதில்லடா. காசு என்னடா காசு? எப்போ வேணா சம்பாதிச்சிக்கலாம். ஆனா நல்ல அன்பான குடும்பம் கிடைக்கிறதுக்கு குடுத்து வைக்கனும்டா மச்சான். எத்தன வயசானாலும் என் பொண்டாட்டி மேல எனக்கிருக்கிற பாசம் குறையாதுடா. அதே மாதிரிதான்டா அவளும்.இந்த மாதிரி ஒரு பொண்ண பாத்து எனக்கு கட்டி வச்சதுக்காக எங்க அப்பா அம்மாவுக்கு ஆயுசு பூராம் நன்றி சொல்லலாம்டா.

எனக்கு ரொம்ப குழப்பமாயிடுச்சு. ‘’சரி மச்சான்… எனக்கு அர்ஜெண்டா ஒரு வேல இருக்கு. நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்டா’’னு சொல்லி அவங்க வூட்டுல அல்லார்கிட்டயும் சொல்லிக்கினு கிளம்பிட்டேன்.

இன்னாடா இது? ஒரே கன்ப்யூசனா இருக்கு? அப்போ… அப்பா அம்மா பாத்து கட்டி வைக்கிறத கட்டிக்கிறதுதான் நல்லதா? யோசன பண்ணிக்கினே வூட்டுக்கு வந்தேன்.

ஒரே கொயப்பமாதான் இருக்கு. வாழ்க்கைக்கு காசுதான் எல்லாமா? லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கின தோஸ்து ஒருத்தன் பணவசதி இல்லாம வாழ்க்கையே வெறுத்துப் பூடுச்சின்றான். வூட்டுல பாத்து கட்டி வைச்சவளை கட்டிக்கின ஒருத்தன் பணம் என்னடா பணம். வாழ்க்கைல பாசம்தான்டா முக்கியம்ன்றான். இன்னா பண்ணலாம்னே புரியல. சரி… நம்ம இன்னொரு பணக்கார தோஸ்து ஒருத்தர் இருக்காரு. காலேஜ்ல நம்ம கூட படிச்சாலும் அப்புறமா அவங்க பணத்தால வெளிநாட்டுக்கெல்லாம் போயி படிச்சிட்டு அவங்க சொந்த கம்பெனிய பாத்துக்கிறாரு இப்போ. அவரும் வூட்டுல பாத்து கட்டி வச்ச பணக்கார பொண்ணையே கட்டிக்கினவரு. அவரப்போயி பாக்கலாம்னு டிசைடு ஆயிட்டம்ப்பா நானு.

அப்பவே அந்த தோஸ்து திருவாளருக்கு போனைப் போட்டேன். அவன்தான் எடுத்தான். ‘’மச்சி… நல்லாயிருக்கியாடா… ரொம்ப நாளுக்கப்புறம் போன் பண்ணியிருக்கே, என்னடா மேட்டர்?’’ னான்.

‘’ஒன்னுமில்லடா மச்சி… உன்கிட்ட கொஞ்சம் பேசனும். சாயந்திரம் நீ ஃப்ரியா?’’ னு கேட்டேன்.

‘’என்னடா மச்சான் தீடீர்னு? ஏதாவது ப்ராப்ளமா? பணம் ஏதாவது வேணுமாடா?’’ னான்.

‘’சே…சே அதெல்லாம் ஒன்னுமில்லடா’’ னு சொன்னதும், ‘’சரி, அப்போ நீ ஈவ்னிங் சிக்ஸ் தர்ட்டிக்கு மேல வீட்டுக்கு வந்திர்டா, அங்க பேசிக்கலாம்’’னு சொல்லிட்டு வச்சிட்டான்.

எப்படியோ கஷ்டப்பட்டு சாயந்திரம் வரைக்கும் மண்டக் கொடச்சலா டைம் பாஸ் பண்ணேன். ஒரு வழியா சாயந்திரம் ஆச்சுது. கொஞ்சம் நல்லா டிரெஸ் பண்ணிக்கினு அவன் வூட்டுக்கு போனேன். வாசல்ல இருந்த செக்யூரிட்டி என்ன நிறுத்தி விவரம் கேட்டுட்டு யாருக்கோ போன் பண்ணான். அப்பால என்கிட்ட வந்து ‘’சார், நீங்க உள்ள போயி உக்காருங்க. முதலாளி இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவார்’’னான்.

நான் மொள்ள நடந்து வூட்டுக்குள்ள போயி அங்கயிருந்த சோபால உக்காந்துக்கினேன். ‘’என்னமா இருக்குது வூடு? அதுசரி… அவனும் பணக்காரன். அவனுக்கு கட்டி வைச்ச பொண்ணும் பெரிய பணக்காரி. பணமும் பணமும் சேந்தா வூடு ஏன் இப்படி அரண்மனை மாதிரி இருக்காதுன்னு?’’ நான் யோசனை பண்ணிக்கினு இருக்கும்போதே நம்ம தோஸ்து திருவாளர் வந்துட்டான். ‘’மச்சான், எப்போடா வந்தே? சாரிடா கொஞ்சம் லேட்டாயிடுச்சு. கிவ் மீ எ டென் மினிட்ஸ். ஃப்ரெஷ்அப் ஆயிட்டு வந்திரேன்டா’’ னு சொல்லிக்கிட்டே அரண்மனைக்குள்ள ஏதோவொரு ரூமுக்குள்ள பூந்துட்டான். பத்து நிமிஷத்துல வந்தவன் ‘’வாடா மச்சான்… கார்டன்ல உக்காந்து பேசலாம்’’னு என்ன கார்டனுக்கு கூட்டிக்கினு போனான். பெரிய நீச்சல் குளம். பக்கத்துலயே அயகா புல்லெல்லாம் வளரவச்சு அதுல டேபிள் சேர்ங்க போட்டிருந்திச்சு. ஆளுக்கு ஒரு சேர்ல எதிர் எதிரா உக்காந்துகினோம்.

‘’சொல்லுடா மச்சி… முதல்ல என்ன சாப்பிடறேன்னு சொல்லு. அப்புறமா பேசலாம். நம்ம ரெண்டு பேரும் சேந்து சரக்கடிச்சி எத்தன நாளாகுது. இன்னக்கி கண்டிப்பா இங்க சேந்து சாப்டறோம்’’னான்.

கார்டுலெஸ் போன எடுத்து என்னெல்லாமோ ஆர்டர் பண்ணான். கொஞ்ச நேரத்தில அவன் வூட்டு வேலக்காரன் ஒருத்தன் ஃபாரின் சரக்கு பாட்டில், ஐஸ் க்யூப்ஸ், விதவிதமான சைடு டிஷ்னு டேபிள் ஃபுல்லா கொண்டாந்து அடுக்கினு போயிட்டான்.

ரெண்டு கிளாச எடுத்து அவனுக்கும் எனக்கும் அவனே ஊத்தி ஐஸ் போட்டு என் கையில ஒரு கிளாச குடுத்து ‘’சியர்ஸ் ஆஃப்டர் எ லாங் டைம்டா மச்சான்’’ னான். நானும் சியர்ஸ் சொல்லிட்டு மொள்ள குடிச்சேன். ஆனா நம்ம தோஸ்து திருவாளர் ஒரே மடக்குல குடிச்சிட்டு அடுத்த ரவுண்டு ஊத்திக்கினாரு. ‘’சொல்லுடா மச்சான், ரொம்ப நாளைக்கு அப்புறம் என்ன பாக்க வந்திருக்கே. என்ன விஷயம்டா?’’ னான்.

‘’ஒன்னுமில்லடா மச்சான். சும்மாதான்டா. உன்ன பாத்து ரொம்ப நாள் ஆயிடுச்சே. எப்பிடியிருக்கே… உன் லைஃப் எல்லாம் எப்பிடிப் போயிட்டு இருக்குன்னு பாத்துனு போலாம்னு வந்தேன். உனக்கென்னடா மச்சான்… ராஜா மாதிரி இருக்கே. உன்ன பாக்கறச்சே ரொம்ப சந்தோஷமா இருக்குடா மச்சி’’னேன்.

‘’நானாடா ராஜா மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன்?’’னு கேட்டு அவன் கொஞ்சம் வித்தியாசமாச் சிரிச்சான். எனக்கு புரியல.

‘’ஏன் மச்சான்… உனக்கென்னடா குறை? ஆமா.. வூட்டுல உன் வொய்ஃப், கொயந்தங்க யாருமே இல்லியா? ஊருக்கு எங்காச்சும் போயிருக்காங்களா?’’னு கேட்டேன்.

என்ன நெனச்சானோ தெரியல. அடுத்த ரவுண்டையும் ஒரே கல்ஃபா அடுச்சிட்டு கலங்குன கண்ணோடு எங்கிட்ட பேச ஆரம்பிச்சான்.

உங்கிட்ட சொல்றதுக்கு என்ன மச்சான்? வாழ்க்கைல காசு பணம் வசதிக்கு ஒரு குறையும் இல்லடா மச்சான். ஆனா வாழ்க்கைல சந்தோஷம்னா என்னன்னே தெரியாத அளவுக்கு ஆயிப்போச்சுடா. ஏதோ மெக்கானிக்கலா ஓடிட்டிருக்குடா லைஃப்.

ஏன்டா மச்சான் இப்பிடிச் சொல்றே? உன் வொய்ஃப் கொயந்தங்கெல்லாம் எங்கடா மச்சான்?

‘’உனக்குதான் தெரியுமேடா. என்னோட பேரண்ட்ஸ் ஸ்டேட்டஸ், வசதின்னு என்னெல்லாமோ பாத்து பணக்கார பொண்ணா எனக்கு கட்டி வச்சாங்க. கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சிச்சு. என் மனசுக்குள்ள நான் வொய்ஃப்னு இமேஜின் பண்ணி வச்சிருந்ததுக்கும் இவளுக்கும் ஒரு ஒற்றுமை கூட இல்லன்றது. அவ பணக்கார வீட்டுல இருந்து வந்ததால அவ வளர்ந்த விதம் அவளோட செயல்கள் எல்லாம் அதுக்குத் தகுந்த மாதிரிதான்டா இருக்குது. கல்யாணம் ஆனதிலயிருந்து இது வரைக்கும் ஒரு நாள் கூட அவ கையால எனக்கு சாப்பாடு பரிமாறினது இல்லடா. இந்த வீட்டுல எல்லாமே வேலக்காரங்கதான். கல்யாணம் ஆன கொஞ்ச நாளக்கு அப்புறம் நாங்க ஒன்னா வீட்டுல இருக்கிற நேரம் கூட கொறஞ்சிப் போச்சுடா. அவளுக்கு எப்போ பாத்தாலும் லேடிஸ் கிளப், ஷாப்பிங், ப்யூட்டி பார்லர்னு அதுதான் உலகம். என்னோட குழந்தைங்களுக்கு வேலக்காரங்க சாப்பாடு ஊட்டுறத பாத்து எத்தன நாள் மனசு நொந்து போயிருக்கேன் தெரியுமாடா? பத்தாததுக்கு குழந்தைங்க படிப்பு, இன்டர்நேஷனல் ஸ்கூல் அது இதுன்னு சொல்லி இப்போ பசங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டாடா. இவ்வளவு சின்ன வயசுலயே என் பசங்க பெத்தவங்கள பிரிஞ்சி ஹாஸ்டல்ல இருக்கிறத நெனச்சா நெஞ்சு வெடிச்சிறமாதிரி இருக்குடா மச்சான். எது பேசினாலும் தேவையில்லாம வீட்டுல சண்டதான் வருது. அதான் ஒரு லெவலுக்கு மேல நம்ம ஸ்டேட்டச காப்பாத்திக்கிறதுக்காக என் வொய்ஃப் கிட்ட எதுவும் கேட்டுக்கிறது இல்லடா நானு. பெரிய தப்பு பண்ணிட்டேன்டா மச்சான் நானு. என் வாழ்க்கையை நானே டிசைடு பண்ணியிருக்கனும். என்னோட பேரண்ட்ஸ் பாத்த பொண்ண கட்டிக்கிட்டது மிகப்பெரிய தப்புடா மச்சான். வசதி கொறஞ்சவளாயிருந்தாலும் பரவாயில்லைனு நானே எனக்கு பிடிச்சவளா, என்ன புரிஞ்சு நடக்கிறவளா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணியிருந்தா நிச்சயம் என் வாழ்க்கை நல்லா இருந்துருக்கும்டா மச்சான். ஒருத்தருக்கொருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்கா இருந்திருப்போம்.
வேலைல இருந்து வந்ததும் நானு, என் பொண்டாட்டி, பசங்க எல்லாரும் இதே புல்லுல உக்காந்து சிரிச்சி பேசி விளையாண்டிருப்போம். ஒன்னா ஃபேமிலியா உக்காந்து சாப்பிட்டிருப்போம். அந்த லைஃப் தனிதான்டா மச்சான். என்ன பண்றது அரேன்ஜ்டு மேரேஜ் பண்ணிட்டு இப்போ லைஃப்பே மெக்கானிக்கலா ஆயிடுச்சு. காசு பணம் என்னடா கிடக்கு? வாழ்க்கைல ஒவ்வொருத்தருக்கும் தன்னை புரிஞ்சிக்கிட்ட அன்பான வாழ்க்கைத் துணை கிடைக்கிறதுதான்டா சொர்க்கம். ஏதோ உன்ன மாதிரி பிரண்டுகிட்ட இதெல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்குடா மச்சான்’’.

அதுக்குப் பிறகு இரவு ஒன்பதரை வரைக்கும் அவன் வூட்டுத் தோட்டத்திலேயே உக்காந்து பேசிட்டு இருந்தோம். அங்கயே வேலக்காரங்க சாப்பாடு எடுத்துனு வந்து வச்சாங்க. ரெண்டு பேரும் சாப்பிட்டோம். அவன் பேச்சு முழுக்க முழுக்க ‘’என்ன புரிஞ்சி நடந்துக்கிற பொண்ணா பாத்து லவ் மேரேஜ் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்டா’’னு அதைச் சுத்தியே பேசிட்டு இருந்தான். ‘’அடிக்கடி வந்து போடா’’னு அவன் சொன்னத ஏத்துக்கிட்டு நான் அவன் வூட்டுல இருந்து கிளம்பி வர்ற வரைக்குமே அவன் பொண்டாட்டி வூட்டுக்கு வரல.

நைட்டு பதினோரு மணிக்கு மேல என் வூட்டுக்கு வந்து நான் படுத்தா மனசெல்லாம் ஏதோ கஷ்டமாவே இருந்திச்சி. என்னன்னே தெரியல. ராஜா மாதிரி வாழ வேண்டியவன். காசு பணம் இருந்தும் வாழ்க்கைல நிம்மதியில்லாம கஷ்டப்படுறானேன்னு நெனக்கிறப்ப ரொம்ப பேஜாரா இருந்திச்சு. கடைசியா நாளைக்கு லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கினு இப்போ வேலைக்குப் போயி ஓரளவுக்கு ஸ்டெடியா இருக்கிற நம்ம திருவாளர் தோஸ்து ஒருத்தரயும் போய் பாத்திட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணிக்கினு அப்டியே தூங்கிட்டேன்.

அடுத்த நாள் காலைல எந்திச்சதும் அவனுக்குப் போன் பண்ணேன். வயக்கம் போல நலம் விசாரிச்சப்புறம் ‘’மச்சான், உன்ன பாக்க இன்னிக்கி சாயந்திரம் வூட்டுக்கு வரலாம்னு இருக்கேன். எத்தன மணிக்கு வரட்டும்டா?’’னு கேட்டேன்.

பக்கத்தில இருந்த அவன் திருமதி கிட்ட கேட்டுட்டு ‘’ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல வாடா. நைட் டின்னர் நம்ம வீட்லதான். ஓகே வா? மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்டா மச்சான்’’ னு சொல்லிட்டுப் போன வச்சிட்டான்.

சாயந்திரம் வரைக்கும் தெரிஞ்சவங்க, எதிர்ப்படுறவங்கன்னு எல்லார்கிட்டயும் லவ் மேரேஜ் பெஸ்ட்டா? இல்ல… அரேன்ஜ்டு மேரேஜ் பெஸ்ட்டா?னு கேட்டுக்கினேயிருந்தேன். ஒருத்தன் வந்து பெரிய பருப்பாட்டம் ‘’மச்சான், லவ் மேரேஜ்ன்றது நாமளா கிணத்துக்குள்ள குதிக்கறது. அரேன்ஜ்டு மேரேஜ்ன்றது நாலு பேர் சேந்து நம்மள கிணத்துக்குள்ள தள்ளுறது’’ன்னான். எனக்கு வந்த கோவத்துக்கு ‘’போடா லூசு, பரதேசி, டோமர், புறம்போக்குன்னு’’ன்னு அவனத் திட்டுனதுதான் மிச்சம். இன்னொரு பெரிசு ஒண்ணு வந்து ‘’ தம்பி, லவ்வோ… அரேன்ஜ்டோ எந்தக் கண்ணாலமா இருந்தாலும் புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கினு வுட்டுக்குடுத்து வாழ்ந்தாதான் வாழ்க்கை இனிமையா இருக்கும். இல்லேன்னா எப்பவுமே சண்டதான்’’னுச்சு. எப்பிடியோ கஷ்டப்பட்டு சாயந்திரம் வரைக்கும் டைம் பாஸ் பண்ணேன். சாயந்திரமானதும் நேரா நம்ம தோஸ்து திருவாளர் வூட்டுக்குப் பறந்துட்டேன்.

நான் போனப்ப அவன் பொண்டாட்டி திருமதி மட்டும்தான் வூட்டுல இருந்தா. ‘’வாங்கண்ணா… இப்போதான் எங்க நியாபகமெல்லாம் வந்துச்சா?’’னு கேட்டு என்ன சோபாவுல உக்காரச் சொன்னா. அவங்க கொயந்தங்கள்ல பெரிசு ஹால்ல உக்காந்து வூட்டுப்பாடம் எழுதிக்கினு இருந்திச்சு. சின்னது பொம்மைங்கள போட்டு விளையாடிட்டு இருந்திச்சி. திருமதி குடிக்கத் தண்ணி கொண்டு வந்து குடுத்தா. அத வாங்கி குடிச்சிட்டு ‘’அவன் இன்னும் வரலயாம்மா’’னு கேட்டேன். ‘’இப்போ வந்துருவார்னா’’னு சொல்லிட்டு ‘’காஃபி எடுத்துட்டு வரட்டுமாண்ணா’’னு கேட்டா.

‘’இல்லம்மா.. அவனும் வந்திரட்டும். ரெண்டு பேரும் சேந்தே காப்பி குடிக்கிறோம்’’னு சொன்னேன். அவ வூட்டுப்பாடம் எழுதிக்கினு இருந்த கொயந்த கிட்டப்போயி உக்காந்து அதுக்குப் பாடம் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சா.

‘’நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கினீங்களே… உங்க வூட்டுலயெல்லாம் உங்க ரெண்டு பேத்தயும் சேத்துக்கிட்டாங்களாம்மா’’னு கேட்டேன்.

‘’ இல்லண்ணா, கல்யாணம் ஆகி இத்தன வருஷம் ஆகியும் அவங்களுக்கு எங்க மேல இருந்த கோவம் குறையலண்ணா. அதான் நாங்களும் யாரைப்பத்தியும் கவலைப்படாம, எனக்கு நான்… உனக்கு நீன்னு ஒருத்தருக்கொருத்தர் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கா அன்பா வாழ்ந்திட்டு இருக்கோம்.
அழகான குழந்தைங்க. அமைதியான அன்பான வாழ்க்கை. அளவான வருமானம். இதுக்கு மேல என்னண்ணா வேணும் எங்களுக்கு?’’

ஏம்மா… உன் பிரசவத்தப்போ யாரும்மா பாத்துக்கிட்டா உன்ன? பெரியவங்க இல்லாம பிரசவத்துலயும், பச்சப்புள்ளங்கள வளர்க்குறதுலேயும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பியேம்மா?

அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா. எனக்கு எப்பவுமே அப்படி ஒரு வருத்தம் வந்திரக் கூடாதுன்னு எங்க வீட்டுக்காரர் என்ன நல்ல பெரிய ஹாஸ்பிட்டல்ல பிரசவத்துக்கு அட்மிட் பண்ணி என் கூடவே இருந்தாருண்ணா. எங்க அம்மா அப்பா கூட என்ன அப்படி பாத்துக்க முடியாது. அந்த அளவுக்கு என்ன பாத்துக்கிட்டாருண்ணா. கை நிறைய சம்பாதிக்கிறாரு. வேலை விட்டா வீடு… வீடு விட்டா வேலைன்னு இருக்காரு. எங்க உலகமே இந்த ரெண்டு குழந்தைங்கதாண்ணா.

அவ சொல்லிக்கிட்டு இருக்கும் போதே திருவாளர் நம்ம தோஸ்து ஆபீஸ்ல இருந்து வந்திட்டாரு.

‘’டேய் மச்சான்… எப்படிடா இருக்கே’’னான். அவன் பொண்டாட்டிய பாத்து ‘’குடிக்க ஏதாவது குடுத்தியாப்பா அவனுக்கு?’’ னு கேட்டான்.

‘’இல்லேங்க..அவரு தண்ணி மட்டும்தான் குடிச்சாரு. நீங்க வந்ததுக்கப்புறம் உங்க கூட சேந்து காஃபி குடிக்கிறேன்னு சொல்லிட்டாருங்க’’

‘’சரிடா மச்சான்… நீங்க பேசிட்டு இருங்க நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிட்டு வந்திரேன்’’னு சொல்லிட்டு அவன் ரூமுக்குள்ளப் போயிட்டான். திருமதி காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்னு கிச்சனுக்குள்ளப் போயிட்டா.

வூட்டுப்பாடம் எழுதிக்கினு இருந்த அவன் மூத்தப் பொண்ணக் கூப்புட்டு ‘’உன் பேரென்னம்மா?’’னேன். அதோட பேரு அவன் மாமியார் பேரு மாதிரியே வச்சிருந்தாங்க. ‘’தம்பிப் பாப்பா பேரு என்னம்மா?’’னேன். அதோட பேரு நம்ம திருவாளர் அவங்க அப்பா பேரு மாதிரியே வச்சிருந்தாங்க.

‘’என் பேரு அப்பா வச்சாரு. தம்பிப் பாப்பாவுக்கு அம்மா பேரு வச்சாங்க’’னு கொயந்த சொன்னதும் எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

நம்ம தோஸ்தும் டிரெஸ் மாத்தினு வந்து என்கிட்ட உக்காந்தான். திருமதி ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டாந்து குடுத்திட்டு ‘’டின்னர் ரெடி பண்றேங்க’’னு சொல்லிட்டு மறுபடியும் கிச்சனுக்குள்ளப் போயிட்டா.

‘’அப்புறம் சொல்லு மச்சான். ரொம்ப நாளுக்கப்புறம் வீட்டுக்கு வந்திருக்கே. என்ன விஷேசம்?’’னான்.

‘’ஒரு விஷேசமும் இல்ல மச்சான். சும்மா உங்களயெல்லாம் பாத்திட்டு போலாம்னுதான் வந்தேன், லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கினியே உன் லைஃப் எல்லாம் எப்பிடிப் போகுது மச்சி?’’

‘’ஒரு குறையும் இல்லடா. அப்பா அம்மா பாத்து கட்டி வச்சிருந்தாக்கூட இப்படி ஒரு லைஃப் அமைஞ்சிருக்குமான்னு டவுட்தான்டா மச்சான். அந்தளவுக்கு அண்டர்ஸ்டாண்டிங்கா, அன்பா போயிட்டு இருக்குடா வாழ்க்கை’’

இல்ல மச்சான்… நிறைய பேரு லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கினு நிம்மதியில்லாம வாழ்ந்துக்கினு இருக்காங்க. ஆனா உங்க வாழ்க்கைய எப்படிடா இவ்வளவு ஹேப்பியா அமைச்சிக்கினீங்க?

ரொம்ப சிம்பிள்டா மச்சான். முதல்ல நமக்காக அவ எல்லாத்தயும் தூக்கியெறிஞ்சிட்டு வந்தவன்றத எப்பவுமே மறக்கக்கூடாது. நாம அத மறக்காம நடந்துக்கற வரைக்கும் அவளுக்கும் நம்ம மேல அதே எண்ணம்தான் இருக்கும். அப்புறம் நிறைய பேரு லவ் பண்ணும் போது மணிக்கணக்கா போன்ல பேசுவாங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே தலைகீழா மாறிடும். அது தப்புடா. காலைல ஆபீஸ் போனவுடனே ஒருவாட்டி போன் பண்ணி நான் ஆபீசுக்கு வந்து சேந்திட்டேம்மான்னு பொண்டாட்டிகிட்ட சொல்லனும். மத்தியானம் லஞ்ச் டைம்ல ஒரு வாட்டி போன் பண்ணி அவ சாப்பிட்டாளானு கேட்டுட்டு அன்னக்கி அவ கட்டிக் குடுத்துருக்கிற சாப்பாட்டோட நிறை குறைகளைச் சொல்லனும். இப்படி ஒரு நாளைக்கு ரெண்டே ரெண்டு வாட்டி போன் பண்ணாப் போதும்டா. அது காதலிக்கும் போது ஐம்பது வாட்டி போன் பண்ணதுக்குச் சமம். அதே மாதிரிதான்டா, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இத்தன வருஷமாகியும் இன்னும் நாங்க முதமுத சந்திச்ச நாள், காதலச் சொன்ன நாள், பிறந்த நாள், கல்யாண நாள் இப்பிடி எல்லா நாளையும் மறக்காம ஒருத்தருக்கொருத்தர் சின்னச்சின்ன கிப்ட், கார்ட்ஸ், சாக்லேட்ஸ் எல்லாம் கொடுத்து கொண்டாடிட்டிருக்கோம். நிறைய பேரு காதலிச்சுக் கட்டிக்கிட்ட பிறகு ஐ லவ் யூ சொல்றதயே மறந்துறாங்க. நாங்க அப்படியில்ல. கல்யாணத்துக்கப்புறம்தான் இன்னும் நெறய தடவ ஐ லவ் யூ சொல்றோம்.
மச்சான் நாம லவ் பண்ணும் போது வெறும் ப்ளஸ் மட்டும்தான்டா தெரியும். கல்யாணத்துக்கப்புறம்தான் ஒருத்தருக்கொருத்தர் மைனசும் தெரிய ஆரம்பிக்கும். ப்ளசும் மைனசும் சேந்ததுதான் வாழ்க்கைனு புரிஞ்சிக்கிட்டு எல்லா மைனசையும் கூட ப்ளஸா மாத்தி வாழ்ந்தோம்னா வாழ்க்கைல எப்பவுமே சந்தோஷம்தான்டா. என்னப் பொறுத்த வரைக்கும் எங்க அப்பா அம்மா பாத்து கட்டி வெச்சிருந்தாக் கூட எனக்கு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருக்குமான்னு டவுட்தான்டா மச்சான்.

அதுக்கப்புறம் நான் அவங்ககிட்ட பெருசா ஒரு கேள்வியும் கேக்கல. கம்முனு அவங்க வூட்டுலயே துண்ணுட்டு எங்க வூட்டுக்கு நீங்க ஃபேமிலியோட ஒரு தபா வரணும்னு சொல்லிட்டு இடத்தக்காலி பண்ணேன்.

ஓவரா கன்ப்யூஸ் ஆயிப்போயிருந்த மூளைக்கு டாஸ்மாக்ல போயி கொஞ்சம் பெட்ரோலப் போட்டுட்டு வூட்டுக்கு வந்ததும் நேரா மொட்டமாடிக்குப் போயி மல்லாக்கப் படுத்துக்கிட்டு கால் மேல கால் போட்டு வானத்தப் பாத்து யோசிச்சேன்.

ஒருத்தன் லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கினு காசில்லாம கஷ்டப்பட்டு லவ் மேரேஜ் வேஸ்ட்டுன்றான்.

ஒருத்தன் காசில்லானாலும் பெரியவங்க பாத்து கட்டி வைக்கிற கண்ணாலத்துலதான் நமக்கு ஏத்த பொண்டாட்டி கிடைக்கறதோட மட்டுமில்லாம கடைசி வரைக்கும் பெரியவங்களும் நமக்குத் துணையாயிருந்து வாழ்க்கை நிம்மதியா ஓடும். அதனால அரேன்ஜ்டு மேரேஜ்தான் பெஸ்ட்டுன்றான்.

இன்னொருத்தன் காசு பணம் எவ்வளவுதான் இருந்தாலும் நமக்கு ஏத்த பொண்ணை நாமளே லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்காம பெத்தவங்க பாத்துக் கட்டி வைக்கிற கண்ணாலத்தில நிம்மதி சந்தோஷம் எல்லாம் பூடும். அதனால அரேன்ஜ்டு மேரேஜ் வேஸ்ட்டுன்றான்.

இன்னொருத்தன் இன்னாடான்னா புரிஞ்சி வாழும் போது ஒருத்தருக்காக ஒருத்தர் வாழும் லவ் மேரேஜ்தான் பெஸ்ட்டுன்றான்.

எத்தினிதபா யோசிச்சாலும் ஒரே கொயப்பமாகி போதைதான் இறங்குதே தவிர கட்சீ வரைக்கும் புரியவேயில்லப்பா…

காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா?, இல்ல… வூட்டுல பாத்து கட்டி வைக்கிறத கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா?...!!!

Monday, May 16, 2011

பதிவர்களின் தொடரும் கடமைகள்...


தேர்தல் முடிந்து, முடிவுகளும் தெரிந்து புது அரசு(சையு)ம் அரியணையில் ஏ(ற்)றியாகிவிட்டது. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையில் நமது ப்ளாக்கர் சமூகம் சமுதாய உணர்வு கொண்டதென்பதை உலகுக்கு நிருபித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மில் பலர் சிறு வயதிலிருந்தே சமூக மாற்றத்திற்கான ஏக்கத்துடனே வளர்ந்து, வாழ்க்கை சக்கரத்தின் வேகச் சுழற்சியில் வேவ்வேறு பாதையில் சிதறிப்போன போதும் நமது சிந்தனைப் புரட்சிகளுக்கு மேடையமைத்த ப்ளாக்கர்ஸ் தளத்தின் மூலம் இப்போதுதான் ஒன்று படமுடிந்திருக்கிறது. நம்மில் எத்தனையோ பேரின் சமூகம் மீதான மனக்குமுறல்களை ப்ளாக்கர்ஸில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இணையதள எழுத்துச் சுதந்திரம் இன்னமும் இடைஞ்சல்களின்றி காக்கப்பட்டு வருவது நமக்கு கிடைத்த முதல் வரமென்பதை மறுப்பதற்கில்லை. மாறிவரும் காலவளர்ச்சியில் இணையதள வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது நம்மைப் போன்ற பதிவர்களுக்கான மற்றுமொரு வரப்பிரசாதமாகும்.

ப்ளாக்கர்ஸ் தளம் ஒரு சக்திமிக்க சமூக மறுமலர்ச்சிக்கான மேடையாய் மாறத் துவங்கியிருக்கிறது. ப்ளாக்கர்கள் நாம் சமூகத்தின் சிந்தனைகளைத் தூண்டும், சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்த கூட்டமாய் உலகத்தின் பார்வையில் மதிக்கப்படத் தொடங்கியிருக்கிறோம். ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது எழுத்துச் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நமக்கென்று சில வரைமுறைகளையும் கடமைகளையும் வகுத்துக் கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை. வரைமுறையின்றி செய்யப்படும் எந்தவொரு செய்கைகளும் பிறரை முகம் சுளிக்க வைப்பதாய் மாறக்கூடுமென்பதால் வரைமுறைகளென்பது நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ள நிச்சயமாய் உதவக்கூடும்.

வரைமுறைகள் என்பது இதைத்தான் எழுதவேண்டும், அதை எழுதக்கூடாது என்பன போன்றதல்ல. ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு சிலர் சினிமாவை மிக நேர்த்தியாய் விமர்சிப்பார்கள். இது படத்தை பார்க்கும் சாமான்யனுக்கும் நல்ல சினிமா என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருக்கும். ஒரு சிலர் வாழ்க்கையின் மிகச்சாதாரண நிகழ்வுகளைக்கூட வெகு நகைச்சுவையாய் எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவார்கள். ஒரு சிலர் கவிதைகளின் வழியே இலக்கியம் வளர்ப்பார்கள். ஒரு சிலர் சிறுகதைகள் எழுதக்கூடும். ஒரு சிலர் பல்வேறு ஊடகங்களில் தாங்கள் ரசித்தவற்றை பிறரும் ரசிக்க அப்படியே ப்ளாக்கரில் எடுத்து எழுதுவார்கள். பெரும்பான்மை ரகத்தார் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், அரசியல் அலசல் கட்டுரைகள் என்று புரட்சி மேடையில் பயணிப்பார்கள். இன்னும்… சமையல் குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள், சட்ட உதவிகள், பயண அனுபவங்கள் என்று எண்ணற்ற வகையான எழுத்துக்களும் ப்ளாக்கர்ஸில் உண்டு.

எந்தவொரு ஊடகமும் பொழுதுபோக்கு அம்சங்களின்றிப் போனால் சாமான்யன் வரை சென்றடையும் வெற்றியை ஈட்டுவதென்பது இயலாத காரியமே. எப்படி வெறும் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் மட்டுமே எல்லாவித வாசகர்களையும் கவருவதாக இருக்காதோ அப்படித்தான் ஒவ்வொரு வகை எழுத்துக்களுமே. வெறும் கவிதைகளாகவோ, வெறும் சிறுகதைகளாகவோ இல்லை வெறும் சினிமா விமர்சனம் மட்டுமாகவோ இருந்தால் ப்ளாக்கர்ஸ் இந்தளவு வளர்ச்சியை எட்டியிருக்குமா என்பது கேள்விக்குறியே. எந்தவொரு துறைக்கும், எந்தவொரு பிரிவுக்கும் பதிவுகளை எழுதும் வண்ணம் நம்மில் பல திறமைசாலிகளிருப்பதே ப்ளாக்கர்ஸ் உலகத்தின் வெற்றிக்கான காரணமாகும்.

மிகச்சிறந்த வெற்றியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வெறுமனே ‘’லவ் பண்ணுவது எப்படி?’’, ‘’கடலை போடுவது எப்படி?’’, ‘’கேரளா பிகரை மடிப்பது எப்படி?’’, ‘’மலையாளிப் பெண்களுக்கு மனசு பெரிசு’’, ‘’பல்லு விளக்குகிறேன்’’, ‘’வாய் கொப்பளிக்கிறேன்’’ என்பன போன்ற கட்டுரைகளை மட்டுமே எழுதி ப்ளாக்கர்ஸ் மீதான சமூகப் பார்வையைக் கெடுத்துக் கொண்டிருக்காமல் அவ்வப்போது உருப்படியான விஷயங்களையும் கொஞ்சம் எழுதுங்கள்.

இதுவரை ஆளுங்கட்சியை பெரும்பான்மையாய் விமர்சித்து எழுதி, நாம் விரும்பிய ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டதோடு முடிந்து விடவில்லை நமது வேலைகள். இனிவரும் காலங்களில் ப்ளாக்கராய் நமது முக்கிய கடமை புது அரசுக்கும், அதன் அரசிக்கும் கூட மிகச்சிறந்த கடிவாளமாய் நமது விமர்சனங்களை எடுத்து வைப்பதுதான். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்கள் ஏதேனுமிருப்பின் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவரின் கடமையாகும்.

நாம் எழுதும் எந்தவொரு பதிவானாலும் அதை வெளியிடும் முன் கீழ்க்காண்பவற்றை ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு வெளியிடுவது நிச்சயமாய் நல்லதொரு ப்ளாக்கரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.

# உங்கள் பதிவில் தனிமனித விமர்சனம் ஏதுமில்லை.
(கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி போன்ற எந்தவொரு அரசியல்வாதியையும் அரசியல் சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. அதே போல் எந்தவொரு நடிகர் நடிகைகளையும் சினிமா சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. ஆனால் அவர்களுடைய தனிமனித வாழ்க்கையை விமர்சித்தல் நாகரீகமற்றது என்பது என் தாழ்மையான கருத்து)

# உங்கள் பதிவில் படிப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அநாகரிகமான வார்த்தைகள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவில் எவரொருவர் பற்றிய செய்தியிலும் அவரை மரியாதையில்லாது விளிக்கும் ஒருமையில் எழுதிய சொற்கள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவில் எழுதப்பட்ட விஷயம் ஏதோவொரு வகையில் வாசகனுக்கு பயனளிக்குமே ஒழிய உருப்படியில்லாத குப்பைச் செய்திகள் ஏதுமில்லை.
(கவிதை மற்றும் சிறுகதை என்றால் இலக்கியம் வளர்க்கும். படிக்கும் வாசகனின் மனதில் நிறைவைத் தரும். சினிமா விமர்சனம் சாமான்யனுக்கு நல்ல சினிமாவை மட்டும் பார்க்கவும் உருப்படியில்லாத சினிமாக்களைத் தவிர்த்து அவன் பணத்தை வீணாகாமல் மிச்சப்படுத்தவும் உதவும். அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் என்றால் சமூக மாற்றத்துக்கு உதவும். இப்படி எந்த வகைப் பதிவானாலும் ஏதோவொரு வகையில் சாமான்யனுக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் இருத்தல் மேலானது).

# உங்கள் பதிவு எந்த விஷயமான படைப்பானாலும் நடுநிலைமையான கருத்துக்களோடு இருக்கிறதே ஒழிய ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவு எதிலிருந்தாவது எடுத்து எழுதப்பட்டதானால் அதைப்பற்றித் தெரிவிக்காமல் மறைக்கப்பட்ட விவரம் ஏதுமில்லை.

மேற்கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒவ்வொரு பதிவின் போதும் ஒவ்வொரு பதிவரும் கடைப்பிடித்தலைக் கடமையாக நிறைவேற்றும் பட்சத்தில் வேகமான வளர்ச்சியிலிருக்கும் நம் ப்ளாக்கர்ஸ் சமூகம் இன்னும் மரியாதைக்குரிய நிலையைச் சென்றடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது சத்தியமான நிச்சயம்.

பின்குறிப்பு :- ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களுமின்றி வெறுமனே நக்கல், நையாண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் பின்னூட்டப் புலிகளை நான் பதிவர்களாகவே கருத்தில் கொள்ளாததால் அவர்களைப் பற்றி எழுதத் தேவையில்லாததாகவே உணர்கிறேன்.

Saturday, May 14, 2011

முதல்வர் "ஜெ"வுக்கு ஒரு சாமான்யனின் கடிதம்…


புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, இதய தெய்வம், எங்கள் அம்மா என்றெல்லாம் அழைக்க நான் உங்கள் கட்சிக்காரன் இல்லையென்பதால் மதிப்பிற்குரிய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என்றே ஆரம்பிக்கிறேன்…

உங்கள் வீறு கொண்ட வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் எதனால் இந்த வெற்றி உங்களுக்கு வழங்கப்பட்டது? இதன் மூலம் வருங்கால அரசியலுக்கு தமிழக மக்கள் உணர்த்திய சேதியென்ன? என்பதையும் விளக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன்.

முதன் முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களது இந்த இமாலய வெற்றிக்கு காரணம் நீங்களோ, உங்களது தேர்தல் அறிக்கைகளோ இல்லை தேர்தல் பிரச்சாரமோ இல்லை என்பதைத்தான். இலவசங்களை அறிவித்த உங்கள் தேர்தல் அறிக்கை உங்கள் வெற்றிக்கு காரணமில்லை என்பது உங்களுக்கு முன் இலவசங்களை வாரியிறைத்தவர்களின் தோல்வியிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பின்னர் உங்கள் வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?...

# கருணாநிதியின் சர்வாதிகார குடும்ப ஆட்சியில் தமிழகம் அவரின் குடும்பம் மற்றும் கட்சியினரால் சுரண்டப்பட்ட விதங்களை படித்தவன் முதல் பாமரன் வரை கொண்டு சென்ற அதிவேக வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியிலிருக்கும் ஊடகத்துறை.

# தேர்தல் கமிஷனின் அதிரடிகளும் நடுநிலைமையும்.

# 2ஜி ஊழல்… இந்தியாவே வாய் பிளந்து மலைத்து நிற்குமளவுக்கு நடந்த ஊழலில் உச்சநீதிமன்றத்தின் அதிரடிகளும், கருணாநிதியின் முகம் சுளிக்க வைத்த அறிக்கைகளும் அரசியல் நாடகங்களும்.

# ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதியின் இனத்துரோகம் பாமரன் வரை சென்றடையாமல் இருந்த போதிலும் சொந்த மீனவத் தமிழர்களின் உயிரிழப்பிலும் ஆட்சியை கெட்டியாகப் பற்றிக்கொண்டு வாய்மூடி மௌனம் காத்த கருணாநிதியின் கையாலாகாத்தனம்.

# தான் என்ன ஊழல் செய்தாலும், என்ன துரோகமிழைத்தாலும் வாரியிறைத்த இலவசப் பிச்சைகளும், ஓட்டுக்குத் தூக்கி வீசும் ஊழல் பணமும் தன்னைக் காக்கும் என்று எண்ணிய கருணாநிதியின் தப்புக்கணக்கு.

# கருணாநிதியின் கவுன்சிலர்கள் முதல் மந்திரிகள் வரை மாநிலம் முழுவதும் நடத்திய அடாவடித்தனங்களும், ஊழல்களும், சொத்து குவிப்புகளும், ரவுடியிசமும்.

# அடுத்த கட்சிக்காரர்களையெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியும், விலைபேசியும் தி.மு.க வில் சேர்த்துக்கொண்டது.

# திரையுலகத்தினரை மிரட்டி மிரட்டியே தனக்குத்தானே கருணாநிதி கலை விழாக்களை நடத்திக்கொண்டது.

# இலவசங்களையும் சலுகைகளையும் தவிர பெயர் சொல்லுமளவுக்கு எந்த உருப்படியானத் திட்டங்களும் நிறைவேற்றாமல் போன ஐந்தாண்டு கால ஆட்சி.

# வாக்களிக்கும் மக்கள் சதவீதத்தில் உருவான ஜனநாயக மறுமலர்ச்சி (அ) எழுச்சி.

# விஜயகாந்துடன் வைத்துக் கொண்ட கூட்டணி ஆதரவு.

# விலைவாசி உயர்வும், ஆட்சியை மாறி மாறி ஒப்படைக்கும் மக்களின் சுழற்சி முறை மனநிலையும்.

மேற்கூறியது போன்ற பல காரணங்களே உங்கள் வெற்றிக்கான அடிப்படையேயன்றி நீங்கள் பெரிதாய் நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி வாக்களித்த கூட்டம் குறைவானதாகவே இருக்கக்கூடும்.

தமிழக மக்கள் நாட்டிற்கு உணர்த்திய தன்மானச் சேதியே வருங்கால அரசியலுக்கும் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் இனியதொரு மாற்றப் பாடமாகும். தமிழ் நாட்டு மக்களுக்கு இலவசங்களே வாழ்க்கையாகிப்போனது, 2ஜி ஊழல் பணம் முழுவதும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டுவாடா செய்யப்படப் போகிறது, தமிழக மக்கள் ஓட்டை நல்ல விலைக்கு விற்கிறார்கள் என்றெல்லாம் அண்டை மாநிலத்தாராலும் அரசியல் பார்வையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழன் தன்மானமிக்கவன், தமிழன் இனவுணர்வுடையவன், தமிழன் சிந்தனைவாதி என்று நாட்டிற்கு உணர்த்தும் சேதியாய் அமைந்திருக்கிறது இந்தத் தேர்தலில் தமிழனின் மானம் காத்த முடிவுகள். ஈழத் தமிழர்களுக்காக போராடுவது போல் முழக்கமிட்டுக் கொண்டே காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கொண்ட கட்சிகளுக்கும் செமத்தியாய் ஆப்படிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவின் மூலம் மக்கள் உங்களுக்கு உணர்த்திய சேதியென்ன?

# கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் போல் உங்களின் தோழி ஆதிக்கம் தலையெடுத்து விடாமல் ஆட்சி நடத்துவது.

# இலவசங்களை வாரியிறைத்து மக்கள் பணத்தை வீணடிக்காமல் உருப்படியான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது.

# ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர் விவகாரங்களில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

# கட்சிக்காரர்களையும் கவுன்சிலர்களையும் கட்டுக்குள் வைத்துக்கொள்வது.

# விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது.

# நாகரீகமான அரசியலும் முடிந்தவரை ஊழலற்ற ஆட்சியும் நடத்துவது.

# தொழில் மயமாக்கல் என்ற போர்வையில் விவசாயிகளின் வாழ்வாதாரங்களில் விளையாடாதிருப்பது.

# எக்காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி கூடாதென்பது.

எப்படியும் அடுத்த ஐந்தாண்டுகளில் என்னென்னவோ மாற்றங்கள் நடக்கலாம். கருணாநிதியின் வயோதிகம் அடுத்த தேர்தல் களத்தில் உங்களுக்கெதிராய் அவரை இல்லாமல் போகச் செய்யலாம். வை.கோ வோ, ஸ்டாலினோ இல்லை விஜயகாந்தோ உங்களுக்கெதிரான மிகப்பெரிய சக்தியாய் உருவாகலாம். இந்த முறை கருணாநிதியை வீழ்த்தியதில் மிக முக்கிய சக்தியாய் விளங்கிய இணையதளம் இன்னமும் பலமான மக்கள் சக்தியாய் மாறக்கூடும்.

எனவே இலவசங்களோ, சலுகைகளோ எந்த விதத்திலும் உங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு எதிர்வரும் ஐந்தாண்டுகளில் நீங்கள் வழங்கப்போகும் நடுநிலைமையான நல்லாட்சிதான் உங்களை நிரந்தர முதல்வராக்குவதும் இல்லை மீண்டுமொரு மவுனப்புரட்சியால் வீழ்த்தப் போவதுமாகும்.

இங்கேயும் ஒரு எகிப்து… மன்னராட்சி வீழ்ந்தது, ஏகாதிபத்தியம் எழுந்தது என்றெல்லாம் கருத்துக் கூற இடமளிக்காமல் இந்த ஐந்து ஆண்டுகள் தமிழர்க்காகவும், தமிழகத்திற்காகவும் ஆட்சி நடத்தி நிரந்தர முதல்வராய் வீற்றிருக்க விழைவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தமிழக சாமானியன்…!

கொக்கரக்கோ, கும்மாங்கோ… இது கோக்கு மாக்கு தத்துவமுங்கோ!


தேர்தல் டென்ஷன், ரிசல்ட் டென்ஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சிங்க… இனிமேலாவது நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கனும்னுதான் நான் படிச்சது, ரசிச்சது, கேட்டது, சிரிச்சது, இந்தஇது, அந்த அதுன்னு எல்லாத்தையும் கலந்து வாரிக்கொட்டிருக்கேன்… என்சாய்!!!

# செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்குமா?. (ம்ம்ம்ம்.. அப்புறம்?!)

# இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்-ஆனா…
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? (ஆஹா..)

# என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதாங்க வாழ்க்கை! (எப்ப்பூபூபூடி…)

# பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? (டேய் முடியலடா!)

# என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆகாது!!-அப்படித்தான்
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!! (அய்யோ சாமீ…ஆள விடுங்கடா..)

# பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா? (ஷ்..யப்பா, இப்பவே கண்ண கட்டுதே!)

# இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? (எப்பிடிடா..?!)

# ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

# தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?
#பல்வலி வந்தா பல்லைப் புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தா காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தா தலையைத்தான் புடுங்க முடியுமா? (டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

# சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா? (ஒரு குரூப்பாத்தான் திரியிறாய்ங்களா?!!!)

# பில் கேட்ஸ்சோட பையனா இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும். (உக்காந்து யோசிப்பாய்ங்களோ?)

# கொலுசு போட்டா சத்தம் வரும்.
சத்தம் போட்டா கொலுசு வருமா?

# பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்! (அடங்கப்பா… டேய்!)

# T Nagar போனா டீ வாங்கலாம்,
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? (இது வேறயா?!)

# என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது. (உன்ன அடிக்கனும்டா முதல்ல!)

# உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது. (ஏன்டா இந்த கொலைவெறி?)

# ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.

# வாழ்க்கை ஒரு பனமரம் மாதிரி,
ஏறினா நுங்கு, விழுந்தா சங்கு!

# நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

# வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

# சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா? (வேணாம்.. அழுதுறுவேன்..!)

# Angry ய இனிப்பா மாத்த ஒன்னே ஒன்னுதான்..
Jangry!

# வெற்றி என்பது என்ன?
அடைமழையின் போது உங்க வீட்டு மரம் இருக்குமே
அதாங்க… wet tree! ( என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?)

# பயம்தான் தோல்விக்கு முக்கிய காரணமாம்…
அதனால இனிமே கண்ணாடிய பாக்காதீங்க! (த்தோடா…)

# 3 G A P A 6 = என்னங்க?
எடிசன் ரேஞ்சுக்கு யோசிப்பீய்ங்களே..
மூஞ்சிய பாரு!

# ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாராம். அவரு ஒரு நாள் பக்கத்து ஊருக்கு போகும் போது அங்க அவருக்கு எல்லாரும் Gelusil குடுத்தாங்களாம். இன்னொரு நாள் இன்னொரு ஊருக்குப்போகும் போது அங்க அவருக்கு எல்லாரும் Benadryl குடுத்தாங்களாம். ஏன்னா.. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் Syrup(சிறப்பு)!

என்னங்க மொக்கை எப்படி? முடிஞ்சா நீங்களும் போடுங்க பின்னூட்டத்தில உங்க மொக்கைய…

Wednesday, May 11, 2011

சுதந்திரம் ஒரு சாபக்கேடா? – மகாத்மா செய்தது சரிதானா?


ஒரு சிறு சுயவிளக்கம் ;-
கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் ஒரு சிலர் கோபம் கொள்ளலாம். ஒரு சிலர் ‘’இவனுங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்ல… எதைத்தான் விமர்சிக்கறதுன்னு ஒரு அளவே இல்லாமப் போச்சு…’’ என்று கட்டுரையை ஒதுக்க நினைக்கலாம். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்… இக்கட்டுரையை நான் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதி விடவில்லை. இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெவ்வேறு வகையான ஃபீல்டு ஒர்க் செய்திருக்கிறேன். கட்டுரையை முழுவதும் படிக்காமல் எந்தவொரு முடிவுக்கும் வராதீர்கள். முழுதுமாகப் படித்த பிறகு உங்கள் விவாதங்களை எடுத்து வையுங்கள். எனது தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். எனது எண்ணத்திலும் கருத்திலும் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற நமது சுதந்திரத்தை சாபக்கேடா என்று வினவும் இந்தக் கட்டுரையை எந்த விதத்திலும் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதவில்லை. அதுபோலவே நமது சுதந்திர இந்தியாவில் கோட்சே காலத்திலிருந்து இன்று வரையிலும் மகாத்மா காந்தியை எதிர்க்கும் கூட்டம் ஒன்று உண்டு. நான் எந்த வகையிலும் காந்தி என்ற தனிமனிதனையோ இல்லை அவரது கொள்கைகளையோ எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல.

எனது பள்ளிப் பருவத்திலிருந்தே எந்தளவுக்கு காந்தியையும் அவரது கொள்கைகளையும் ஆதரித்தேனோ அதே அளவு சுதந்திரம் வாங்கித் தந்த அவரது செய்கையின் மீது என் உள் மனதினில் ஒரு எதிர்ப்பும் உருவாயிற்று. அவ்வாறான எதிர்ப்புக்கு முழு முதற்காரணம் சுதந்திரத்திற்கு பிறகான நமது தாய்நாட்டின் சீரழிவுகள்தான். வெள்ளையர்களிடமிருந்து ஆட்சி, அதிகாரம், பதவி என மொத்தத்தையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவை ஆள நினைத்த ஒரு அரசியல்வாத கூட்டத்தின் சதிவலையில் சிக்கி சுதந்திரம் என்று போராடியவர்தான் மகாத்மா என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆகவே இந்தக் கட்டுரை பிரிட்டிஷார் காலத்தில் இந்தியா அடைந்த முன்னேற்றங்களையும், சுதந்திரம் என்ற பெயரில் நம் தலையில் நாமே கொள்ளிக் கட்டையை எடுத்து சொரிந்து கொண்டதையும் பற்றிய ஒரு ஆதங்கக் கட்டுரை மட்டுமே.


பிரிட்டிஷ் காலடி ஒரு முன்னோட்டம் ;-

ஏழாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியும் அதன் கடல் வழி வாணிபங்களும் அரேபியர்கள், சுல்தான்கள், மொகலாயர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திலேயே இருந்துள்ளது. மே17, 1498ல் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கான புது கடல் வழியைக் கண்டு பிடித்து காலிகட்டில் காலடி வைத்ததுதான் மேற்கத்திய நாடுகள் இந்திய வாணிபச் சந்தையில் நுழையக் காரணமான முதல் அடிப்படை நிகழ்வாகும். அக்காலத்தில் முதலில் இந்தியாவில் வாணிபம் செய்ய நுழைந்தது போர்ச்சுகீசியர்கள் மட்டுமே. 1503ம் ஆண்டில் வாஸ்கோடகாமாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அல்ஃபோன்ஸா என்ற போர்ச்சுகீசியத் தலைவரால் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பெரும்பாலானவை போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டது. முதலில் டையூ, டாமன், பாசின், பாம்பே, கோவா, மெட்ராஸ் சாந்தோம், பெங்கால் கூக்ளி மற்றும் சிலோனின் பெரும்பகுதிகளும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் காலப்போக்கில் கோவா, டையூ, டாமன் தவிர மீதிப்பகுதிகள் அனைத்தும் டச்சு, ஃப்ரென்ச் மற்றும் ஆங்கிலேய ஆட்சியால் கைப்பற்றப்பட்டன. கோவா, டையூ, டாமன் மட்டும் 1961ம் ஆண்டுவரையிலும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது.

போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு தென்கிழக்கு ஆசியாவின் வாசனைப் பொருட்கள் வாணிபத்தைக் குறிவைத்து டச்சுக்காரர்களால் 1602ம் ஆண்டு நிறுவப்பட்ட டச்சு கிழக்கிந்திய கம்பெனி 1605ல் அம்பாய்னா என்ற பகுதியையும், 1619ல் ஜகார்த்தாவையும், 1641ல் மலாக்காவையும் மற்றும் சிலோனின் பெரும்பகுதிகளையும் போர்ச்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்றியது. குஜராத், பெங்கால், பீகார், ஒரிஸ்ஸா மற்றும் கோரமண்டல் கடற்கரைபகுதிகளில் டச்சுக்காரர்களால் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. எனினும் அதற்கு பின் இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்களால் டச்சு ஆதிக்கமும் பெரும்பாலான பகுதிகளில் வீழ்த்தப்பட்டது.

டச்சுக்காரர்களுக்குப் பிறகு இந்தியாவில் வியாபாரம் செய்ய நுழைந்தவர்கள்தான் பிரிட்டிஷார். இங்கிலாந்தின் பொருளாதார நன்மைகளுக்காக டிசம்பர் 31, 1600ல் இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவால் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக கிழக்கத்திய வாணிகம் முழுவதையும் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமே கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. அப்போது வட இந்தியாவின் பெரும்பகுதிகள் மொகலாய சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1609ம் ஆண்டு வில்லியம் ஹேக்கின்ஸ் என்பவர் பிரிட்டிஷாரின் வாணிபத்திற்கு அனுமதி கேட்டு அப்போதைய மொகலாயப் பேரரசர் ஜகாங்ஹூரின் அரசவைக்கு அனுப்பப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டு திரும்பினார். மீண்டும் 1617ல் சர் தாமஸ் ரோ என்பவர் மொகலாயப் பேரரசரிடம் அனுமதிக்காக அனுப்பப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகே சர் தாமஸால் மன்னர் ஜகாங்ஹூரின் அனுமதியைப் பெற முடிந்தது. அதைத்தொடர்ந்து 1619ல் பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை இந்தியாவின் சூரத் நகரத்தில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக விரிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் 1639ல் நிறுவப்பட்ட மதராஸ் செயின்ட் சார்ஜ் கோட்டையும் முக்கிய ஒன்றாகும். அதேபோல் 1668ல் சார்லஸ்-II என்பவர் போர்ச்சுகீசியர்களிடமிருந்து வரதட்சணையாகப் பெற்ற பாம்பேயை வருட வாடகை அடிப்படையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு கைமாற்றிக் கொடுத்தார். வெவ்வேறு பகுதிகளிலும் தங்களுடைய தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கிய பிரிட்டிஷார் அந்தந்த பகுதி ஆட்சியாளர்களுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். ஆரம்பகாலத்தில் பிரிட்டிஷாரின் அனைத்து நடவடிக்கைகளும் அவர்களின் வியாபாரம் சம்பந்தபட்டதாக மட்டுமே இருந்தன.
அங்கங்கே பிரிட்டிஷாரின் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மன்னர்களும் இருந்ததால் 1740 முதல் 1765ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பிரிட்டிஷார் வியாபாரத்தில் மட்டுமன்றி அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலும் தங்களை பலப்படுத்திக் கொண்டனர். 1757ம் ஆண்டு தங்கள் வியாபாரத்திற்கு அனுமதியளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த பெங்கால் நவாப்பின் மீது ராபர்ட் கிளைவ் என்பவரின் தலைமையில் பிரிட்டிஷ் படையெடுப்பு நடைபெற்றது. ப்ளாசி யுத்தம் என்றழைக்கப்பட்ட இந்தப் போர் வழங்கிய வெற்றிதான் பிரிட்டிஷாரை வியாபாரிகள் என்ற நிலையிலிருந்து ஆட்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றிய அடிப்படை நிகழ்வாகும்.
பிளாசி யுத்தத்திற்குப் பிறகு இந்தியாவின் பெரும்பகுதிகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் முக்கியமானவர் வாரன் ஹேஸ்டிங். துண்டு துண்டாக மன்னராட்சிகளின் கட்டுப்பாட்டில் சிதறிக் கிடந்த பகுதிகளை ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்கியதன் பெரும்பங்கும் இவரையேச் சாரும்.

ஒருங்கினைந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் அவரே. 1757ல் இருந்து 1857ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியானது இந்தியாவின் பெரும்பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. இந்நிலையில்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்டம் என்றழைக்கப்படும் சிப்பாய் கலகம் 1857ம் ஆண்டு வெடித்தது. இருபக்கமுமே பெரும் இழப்புகளை ஏற்படுத்திய இந்நிகழ்வே இந்தியாவின் மீதான ஆளுகைப் பவரை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து பார்லிமெண்ட்டின் கைகளுக்கு மாற்றக் காரணமானதாகும். இதற்குப் பிறகு இந்தியாவை ஆள கவர்னர் ஜெனரல் அல்லது வைஸ்ராய் ஆஃப் இந்தியா என்ற பதவி உருவாக்கப்பட்டு அது இங்கிலாந்தில் செக்ரெட்டரி ஃபார் ஸ்டேட் ஆஃப் இந்தியா என்ற பதவி வகிக்கும் கேபினெட் மெம்பர் ஒருவரின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் செயல்படுமாறு வகுக்கப்பட்டது. அச்சமயத்தில் ராணி விக்டோரியா வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்தியாவின் பெண் கல்வியும், விதவைகள் மறுமணமும், மண வயதுக்கான வரம்புகளும், பெண்களுக்கான சமூக அந்தஸ்துகளுமே முக்கிய இடம் பெற்றிருந்தன.

பிரிட்டிஷார் காலடி வைத்தது முதல் 1947ம் ஆண்டு வரையிலான காலகட்டங்கள் சுதந்திரத்திற்காக போராடிய காலமாக மட்டுமே நமது வரலாற்றில் சித்தரிக்கப்பட்டனவே தவிர அக்காலத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் பற்றிய செய்திகள் பெரும்பாலும் அமுங்கியேப் போயின அல்லது அமுக்கப்பட்டன. சுதந்திரம் மற்றும் அது சம்பந்தமான போராட்டங்கள் மட்டுமே நமது வரலாற்றுப் பாடங்களில் பதிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது ஒரு தலைப்பட்சமானதாகும். ஒருவேளை ஆரம்ப காலத்திலிருந்தே அவ்வாறு பழக்கப்பட்டதால் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராய்ப் பேசுவது ஏதேனும் பிரச்சனையை உண்டு பண்ணுமென்று பிரிட்டிஷார் ஆட்சியின் உண்மை முகத்தை எழுத எவருக்கும் துணிவின்றிப்போனதா?

பிரிட்டிஷார் வழங்கிய வளர்ச்சிகள் என்னென்ன?

# பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வழங்கிய முதல் நன்மை பல்வேறு சிறு, குறுநில, மாமன்னர்களின் ஆளுமையில் சிதறிக் கிடந்த பகுதிகளையெல்லாம் கைப்பற்றி இணைத்து இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாடாக உருவாக்கியதுதான். இல்லையென்றால் இந்தியா என்றொரு தேசம் உருவாகியிருக்குமா என்பது கற்பனைக்கும் எட்டாத கேள்விக்குறியே!

இந்திய சுதந்திரப் போராட்டம்… பிரிட்டிஷார் கொடுமைக்காரர்கள்… என்றெல்லாம் வாய் கிழிய பேசுவோர்க்கு எனது முதல் கேள்வி பிரிட்டிஷார் காலடி படாமல் போயிருந்தால் எங்கேயிருந்து, எப்படி, எவரால் ஒருங்கிணைந்து உருவாகியிருக்கக் கூடும் இந்தியா என்றொரு தேசம்? இன்றளவும் மொழியினால் பாகுபட்ட பல்வேறு நாடுகளாக சிதறிக் கிடந்திருக்குமே தவிர வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரததேசம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதுதானே நிஜம்?!

# பிரிட்டிஷார் நமக்கு வழங்கிய நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்ட மற்றுமொரு முக்கிய நன்மை ‘’இந்தியன் ரெயில்வேஸ்’’.

சரியான சாலை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத ஒரு தேசத்தில் 1832ம் ஆண்டு ரெயில்வேஸ்க்கான முதல் திட்ட அறிக்கை மதராஸில் சமர்ப்பிக்கப்பட்டது. 1845ம் ஆண்டு மதராஸ் ரெயில்வே கம்பெனி, கிழக்கிந்திய ரெயில்வே கம்பெனி ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன. 1849 ஆகஸ்ட் 1ம் தேதி கிரேட் இண்டியன் பெனின்சுலார் ரெயில்வே இங்கிலாந்து பார்லிமெண்டில் சட்டம் நிறைவேற்றி ஒருங்கிணைக்கப்பட்டது. அதே ஆகஸ்ட் 17ம் தேதி ‘’ஓல்டு கேரண்டி சிஸ்டம்’’ எனப்படும் இங்கிலீஷ் கம்பெனிகள் இண்டியன் ரெயில்வேஸில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கான திட்டமானது இறுதி செய்யப்பட்டது. 1852ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பாம்பே-தேனிக்கு இடையிலான 35கி.மீ தூரத்தில் இந்தியாவில் ரெயில் சேவையின் முதல் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதே 1852ம் ஆண்டு மெட்ராஸ் கேரண்டிடு ரெயில்வே கம்பெனியும் தோற்றுவிக்கப்பட்டது. 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மாலை 3.35மணிக்கு இந்தியாவின் முதல் ட்ரெயின் பாம்பேயிலிருந்து தேனி நோக்கிப் புறப்பட்டது.
1849ல் ஒரேயொரு கிலோமீட்டர் கூட ரெயில் பாதையில்லாத இந்திய தேசத்தில் 1929ம் ஆண்டு எல்லா மாவட்டங்களும் பயனடையும் வகையில் 41,000 மைல்கள் ரெயில்பாதை சேவை வழங்கப்பட்டதென்றால் அது பிரிட்டிஷார் நமக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசென்பதை மறுக்க இயலுமா?

இண்டியன் ரயில்வேஸ் நெட்வொர்க் 1870ல்

இண்டியன் ரயில்வேஸ் நெட்வொர்க் 1909ல்

வாதிப்பவர்கள் நிறைய பேர் பிரிட்டிஷார் ரெயில்வேஸை நிறுவியதற்கு காரணம் அவர்கள் வியாபாரத்திற்கான போக்குவரத்து நோக்கத்திலேயே என்கிறார்கள். இருக்கலாம்… ஆனால் அப்போது அவர்கள் இது எங்களுக்காக நாங்கள் தோற்றுவித்தது. இதில் இந்தியர்கள் எவரும் பயணம் செய்யக்கூடாது என்று தடைவிதித்ததாக வரலாறு ஏதுமில்லையே. அதுபோலவே சுதந்திரத்திற்கு பிறகு இது எங்கள் சொத்து என்று கூறி தண்டவாளங்களையெல்லாம் பெயர்த்தெடுத்துச் சென்று விட்டார்களா என்ன?
இன்னும் கொஞ்சபேர் ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளெல்லாம் எப்போதுமே காலணிஆதிக்கத்தில் இருந்ததில்லை. அவர்களெல்லாம் அவர்களுக்கான ரெயில் சேவைகளை அவர்களே தோற்றுவித்துக் கொள்ளவில்லையா? அதுபோலத்தான் நாமும் பிரிட்டிஷார் இல்லையென்றாலும் நாமே உருவாக்கியிருப்போம் இண்டியன் ரெயில்வேஸை என்று உருப்படாத வாதங்களை அடுக்குகிறார்கள். ஒருவேளை மன்னராட்சியில் சிதறிக் கிடந்த தேசங்களை ஒன்றிணைத்து நாமே இந்தியாவை உருவாக்கியிருந்தால் இந்தியன் ரெயில்வேஸையும் நாமே உருவாக்கியிருப்போம்தான். ஆனால் எப்போது? நமது ரெயில்வேஸின் இன்றைய நிலையை அடையவே இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
உலகின் மிகப்பெரிய ரெயில்வேஸ் வரிசையில் நமது இண்டியன் ரெயில்வேசும் இடம் பெறுகிறதென்றால் அது பிரிட்டிஷார் நமக்களித்த பரிசா இல்லையா என்பதை ஒவ்வொருவரும் மனசாட்சியில் கைவைத்துக் கேட்டுக் கொள்ளலாம். அதுபோலவே இன்றைய இண்டியன் ரெயில்வேஸின் புராதனச் சின்னங்களாய் மின்னுகின்ற ஒவ்வொரு ரெயில் நிலையங்களும் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டவைகளே.

பாம்பே விக்டோரியா டெர்மினலாய் அன்று(1887)


மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினலாய் இன்று


மதராஸ் சென்ட்ரல் அன்று
(1874)
சென்னை சென்ட்ரல் இன்று


சென்னை எக்மோர்


கல்கத்தா ஹவுரா ஸ்டேசன்


# பிரிட்டிஷார் காலத்தில் நாம் பெற்ற மற்றுமொரு நன்மை கல்வியறிவு மற்றும் நாகரீக மறுமலர்ச்சி அடைந்த இந்தியா.
பிரிட்டிஷார் காலத்தில் கல்வியில் ஆங்கிலம் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டதாய் கதறுவோரெல்லாம் சுதந்திரம் அடைந்ததும் இந்தியக் கல்வியிலிருந்து ஆங்கிலத்தை அகற்றியிருக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை?... செய்ய மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும், பிரிட்டிஷார் வகுத்துக் கொடுத்த கல்விப்பாதை சரியானதுதான் என்பது. ஒரு காலத்தில் பாம்புகளும் சாமியார்களுமாய் நிறைந்திருந்த தேசமிது. இன்று கல்வியிலும் நாகரீகத்திலும் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரிட்டிஷார் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தினால்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.
இன்றைய சுதந்திர இந்தியாவின் பிரசித்தி பெற்ற பல அரசாங்கக் கல்விக் கூடங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதே. 1857ல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 1882ல் இந்திய உயர்கல்வியின் வளர்ச்சி குறித்து ஆராய்வதற்காக எஜிகேஷன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1904ம் ஆண்டு லார்டு கர்ஷன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இண்டியன் யுனிவர்சிட்டீஸ் ஆக்ட் என்பதன் அடிப்படையில் முதல் மூன்று பல்கலைக்கழகங்களும் 1882ல் நிறுவப்பட்ட பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் 1887ல் நிறுவப்பட்ட அலாகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வரிசையில் இணைக்கப்பட்டன. பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கியதால் 1916ல் மைசூர் பல்கலைக்கழகமும் , 1917ல் பாட்னா பல்கலைக்கழகமும் , 1918ல் உஸ்மானியா பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன. முதல் உலகப்போருக்குப்பிறகான காலகட்டத்தில் 1921ல் அலிகார், டாக்கா, லக்னோ பல்கலைக்கழகங்களும் 1922ல் டெல்லி பல்கலைக்கழகமும் , 1923ல் நாக்பூர் பல்கலைக்கழகமும் , 1926ல் ஆந்திரா பல்கலைக்கழகமும், 1927ல் ஆக்ரா பல்கலைக்கழகமும் , 1929ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டன.
பெண்கள் மனைவியாக, தாயாக, தாசிகளாக அடிமைப்படுத்தப்பட்டு ஆட்கொள்ளப்பட்டிருந்த தேசத்தில் அவர்களின் சுயஉரிமைக்கான பாதைகளைத் திறந்தது பிரிட்டிஷ் அரசாங்கமே.

பெண்கள் படிப்பதே பாவம் என்று வகுக்கப்பட்டிருந்த பண்டைய இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கான கல்லூரியை நிறுவி பெண் விடுதலைக்கும் ஆண் பெண் சம உரிமைகளுக்கும் அடித்தளமிட்டவர்கள் பிரிட்டிஷாரே. ஜான் எலியட் டிரின்க் வாட்டர் பெத்யூன் என்பவரால் 1849ம் ஆண்டு கல்கத்தாவில் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டு 1879ல் கல்லூரியாக உருவெடுத்த ‘’பெத்யூன் காலேஜ்’’தான் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரியாகும்.

இந்து விதவைகளின் மறுமணமும் பிரிட்டிஷாரால் ஆதரிக்கப்பட்ட மற்றுமொரு பெண்ணுரிமை நடவடிக்கையாகும்.
பிரிட்டிஷார் நம்மை ஆண்டகாலத்திலும் சுதந்திரப் போராட்டக் கொடி பிடித்துச் சுற்றாமல் ஒழுங்காய் கல்வி கற்றோர்க்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. படித்தவர்களுக்கான மரியாதையை பிரிட்டிஷ் அரசு ஒருபோதும் மறுத்ததாய் வரலாறு ஏதுமில்லை என்பதே அவர்களின் நிர்வாக மேன்மைக்கான சான்றாகும்.

# எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்தில் ஜனநாயகத்தின் கோவில் என்றழைக்கப்படும் நமது பாராளுமன்றக் கட்டிடமும் அதன் நடைமுறைகளும் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதுதான். இன்று வரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் கூட முழுக்க முழுக்க பிரிட்டிஷாரை தழுவியதேயன்றி நாமாக சொந்தமாக உருவாக்கிக் கொண்டதல்ல என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.
1861ம் ஆண்டில் இண்டியன் கவுன்சில்ஸ் ஆக்ட், இண்டியன் ஹைகோர்ட்ஸ் ஆக்ட் மற்றும் இண்டியன் பீனல் கோடு ஆகியவை பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்படியே படிப்படியாக இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களும் பிரிட்டிஷாரால் தோற்றுவிக்கப்பட்டன. 1912ம் ஆண்டில் இந்தியாவின் தலைநகராய் டெல்லியை ஆக்கியதும் பிரிட்டிஷாரே. 1919ம் ஆண்டில் உருவான கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா ஆக்ட் என்பதன் ஒரு பகுதியில் இரு அவைகளுடன் கூடிய இந்திய தேசிய நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே சட்டம்தான் 10ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கமிஷனை நிறுவி இந்தியாவுக்கு சுயராஜ்ய உரிமை வழங்கலாமாயென்று பரிசீலிக்கவும் பரிந்துரைத்திருந்தது. பிரபலமான ஆர்கிடெக்ட் லுட்யென்ஸ் என்பவர் வடிவமைத்து, சர் ஹெர்பெர்ட் பேக்கர்ஸ் என்பவரின் நேரடிப்பார்வையின் கீழ் கட்டப்பட்டதுதான் நமது பாராளுமன்றக்கட்டிடம். 85மீட்டர் ஆரமும் 900மீட்டர் சுற்றளவும் கொண்டு வட்ட வடிவமாக கட்டப்பட்டது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஆறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் ஜனவரி18, 1927ம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் ஆஃப் இந்தியா லார்டு இர்வின் என்பவரால் திறக்கப்பட்டது.

# சாலை வசதிகள், மின்சாரம், டெலிபோன், தபால்துறை, விமானச்சேவை என்று வளரும் நாட்டுக்கான அத்தனை அடிப்படைத் தேவைகளும் உடனுக்குடன் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது பிரிட்டிஷ் ஆட்சியினால்தான். வெறுமனே வியாபார நோக்கத்தில் மட்டுமே பிரிட்டிஷார் இதையெல்லாம் இந்தியாவில் நிறுவினார்கள் என்பது ஒப்புக் கொள்ள முடியாத வேடிக்கை விவாதமாகத்தான் தெரிகிறது.

# பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் தனிமனித வருமானத்தின் அளவு வெகுவாய்க் குறைந்து போனதாய் புள்ளிவிவரங்கள் அடுக்கப்படுகின்றன. வேலைக்கேச் செல்லாமல் சுதந்திரம், போராட்டம் என்று தெருவில் திரிந்து கொண்டிருக்கையில் எப்படி பெருகும் தனிமனித வருமானம்? அது சரி… சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தனிமனித வருமானத்தில் நாம் என்ன சாதித்துவிட்டோம்? வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் சதவீதம் இன்னும் ஏன் பூஜ்யமாகக் குறையவில்லை? இன்னும் என் மக்களை பிச்சையெடுக்க வைத்துக் கொண்டுதானேயிருக்கிறது உங்கள் சுதந்திரம்?...

# வெவ்வேறு அரசர்களின் கீழ் வெவ்வேறு சட்டதிட்டங்களில் அடைந்து கிடந்த மண்ணில், நாடு முழுமைக்கும் ஒரே சட்டதிட்டங்களை வகுத்து அமல்படுத்தியதும் பிரிட்டிஷ் அரசாங்கமே. தனிமனித உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அன்றைய பிரிட்டிஷ் சட்டங்களைத்தான் இன்றளவும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியில் உள்நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் வெகுவாய்க் குறைந்திருந்ததாகவே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன.

# பிரிட்டிஷ் அரசு நமக்கு வழங்கிய மற்றுமொரு முக்கிய அம்சம் எல்லைப்பாதுகாப்பு மற்றும் நிலையான அரசு. பல்வேறு மாடர்ன் அம்சங்களுடன் கூடிய பயிற்சியையும், இராணுவத்தையும் உருவாக்கிய பிரிட்டிஷ் அரசே இந்தியா மீது வேறு நாடுகளின் படையெடுப்பு நடவாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இன்றளவிலும் நமது இந்திய இராணுவத்தில் பிரிட்டிஷாரின் பல்வேறு நிர்வாக வழிமுறைகளும், பயிற்சி முறைகளும் மாற்றப்படாமல் பின்பற்றப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான அரசென்பது எவ்வளவு அவசியமென்று இப்போது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரியும். பிரிட்டிஷ் காலத்தில் அப்படியொரு நிலையான அரசு இருந்தது நிச்சயம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

# சென்னை, பம்பாய், கல்கத்தா, கொச்சின், விசாகப்பட்டிணம் உட்பட நாடு முழுவதுமுள்ள ஏற்றுமதி, இறக்குமதிக்கான பல்வேறு துறைமுகங்கள் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டவைகளே.

கொல்கத்தா துறைமுகம் 1852


விசாகப்பட்டிணம் துறைமுகம்# பழைய அரசர் கால வரிவிதிப்பு முறைகளை மாற்றி ஒழுங்குமுறைப்படுத்தியதும் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பிரிட்டிஷ் அரசில் 1793ம் ஆண்டு லார்டு கார்ன்வாலிஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பெர்மனெண்ட் செட்டில்மெண்ட் எனப்பட்ட பிரிட்டிஷ் ரெவின்யூ சிஸ்டத்தின் வருமான வரியும், சொத்து வரியும்தான் இன்றளவும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு நாட்டுக்கு வருமானம் வழங்கும் சிறப்பான வழிகளாய்த் திகழ்கின்றன.

# பிரிட்டிஷ் ஆட்சியின் இன்னுமொரு முக்கிய அம்சம் நமது நீர்வளத்தைப் பாதுகாத்தது. நமது நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களும், அணைக்கட்டுகளும், பாசனக் கால்வாய்களும் பிரிட்டிஷாரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவைகளே.

சுதந்திரத்திற்குப் பிறகு நீர்வளத்தைக் காக்க நமது இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலசினால் வெறும் ஏமாற்றமும் வெறுப்பும் மட்டுமே மிஞ்சுகிறது. அட… நீர்வளத்தை காக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அழிக்கும் வேலையல்லவா நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஜீவநதிகளின் வயிற்றிலும் சாயப்பட்டரைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என்று எந்தவொரு குற்ற உணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் கலந்து கொண்டிருக்கிறோமே… நமது நாளைய தலைமுறைகள் தண்ணீருக்கு அல்லல்படும் நேரத்தில் என்ன சாதிக்கப் போகிறது இந்தச் சுதந்திரம்? இந்தியாவின் மிகச்சிறந்த நீர்வழித்தடமாக வந்திருக்க வேண்டிய கூவம் நதியைச் சிதைத்ததே நமது சுதந்திரச் சீரழிவின் சிறந்த உதாரணமாகும்.
பிரிட்டிஷார் ஆட்சி இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருந்தால் எப்போதோ தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்போது பஞ்சமும், வெள்ளச்சேதமும் நம் பக்கத்திலேயே வராமல் தடுக்கப்பட்டிருக்கும்.

# நமது நாட்டின் சட்டசபை கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், டவுன் ஹால்ஸ், சர்ச்சுகள், மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக் கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள், மியூசியம்கள், நீதிமன்றக்கட்டிடங்கள் என பல்வேறு வகையான பெரும்பாலான கட்டிடங்கள் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டவைகளே.

சர்ச் கேட்-மும்பைவிக்டோரியா ஹால்-கல்கத்தாஹவுரா பாலம்-கல்கத்தாதாஜ் ஹோட்டல்-மும்பைசெயின்ட் பீட்டர்ஸ் சர்ச்-ராயபுரம்,சென்னைசாந்தோம் சர்ச்-சென்னை# மக்கள் தொகை கணக்கெடுப்பை நமக்கு அறிமுகப்படுத்தியதும் பிரிட்டிஷாரே. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871-72ல் ஹெச்.பெவிர்லி என்ற பெங்கால் சென்சஸ் கமிஷனரால் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் சாதிவாரியான முறை அமல்படுத்தப்பட்டதுதான் இன்றளவும் உள்ள தீண்டாமை மற்றும் சாதிப்பாகுபாடுக்கு காரணம் என்று பிரிட்டிஷார் மீது குற்றம் சாட்டப்படுகிறது. பிரிட்டிஷார் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தியதன் அடிப்படையே சமுதாய ஏற்றதாழ்வுகளை களையும் நோக்கத்தில்தான். அன்றைய பிரிட்டிஷ் கணக்கெடுப்பை குற்றம் சொல்லும் யோக்கியர்கள் இன்று சாதிவாரியாக அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை வாய்மூடிப் பெற்றுக் கொள்ளுவது ஏன்? இன்றும் 2011மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை அமல்படுத்துவது ஏன்? பிரிட்டிஷார் செய்தால் தவறு… அதையே நீங்கள் செய்தால் சரியா?
# இந்தியாவில் ஷேர் மார்க்கெட்டை அறிமுகப்படுத்தியதும் பிரிட்டிஷாரே. 1850ம் ஆண்டு பிரிட்டிஷார் கொண்டு வந்த கம்பெனீஸ் ஆக்ட் என்ற சட்டம் பல்வேறு ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனிகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட காரணாமாயிருந்தது. தி நேட்டிவ் ஷேர் அண்டு ஸ்டாக் புரோக்கர்ஸ் அசோஸியேசன் என்ற பெயரில் பாம்பே ஸ்டாக் எக்சேன்ஜ் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1899ம் ஆண்டு ஜேம்ஸ் மேக் கிளீன் என்ற எம்.பி யால் புரோக்கர்ஸ் ஹால் துவக்கிவைக்கப்பட்டது. 1930ம் ஆண்டு கட்டப்பட்டு அதே டிசம்பரில் துவங்கியதுதான் இன்றைய ஸ்டாக் எக்சேன்ஜ் இருக்கும் கட்டிடமாகும்.


# இப்படி இந்தியாவின் எந்தவொரு முன்னேற்றத்தைத் தொட்டாலும் பெரும்பாலும் அது பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய அத்தனை விஷயங்களும் சுதந்திரப் போராட்டம் என்ற ஒற்றைச் சொல்லில் ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்ட வரலாறாகிப்போனது.

மகாத்மா செய்தது சரிதானா? ;-

1869 அக்டோபர் 2ம் தேதி குஜராத்தில் போர்பந்தர் எனுமிடத்தில் பிறந்த காந்தி இலண்டன் யுனிவர்சிட்டியில் சட்டப்படிப்பு பயின்று முடித்து 1891ம் ஆண்டு இந்தியா திரும்பி இங்கே இரண்டு வருடங்கள் வக்கீலாகப் பயிற்சி செய்தார். பெரிதான வெற்றியாளராகாத நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய நிறுவனத்திற்கு சட்டஆலோசகராக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டு டர்பன் நகரைச் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்க மண்ணில் அப்போதிருந்த நிறவெறியையும், இந்தியர்களைக் கேவலமாக நடத்தும் விதங்களையும் பார்த்த காந்தி 1896ல் வெள்ளை நிறத் தென்னாப்பிரிக்கர்களால் ஒரு ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்ட பிறகு, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். அமைதி வழியிலான எதிர்ப்பு, அரசுக்கு ஒத்துழையாமை ஆகியவற்றையே தனது போராட்ட வழிகளாக கடைப்பிடிக்கத் தொடங்கினார். காந்தியைக் கவர்ந்த பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களே அவருடைய அமைதிப் போராட்ட வழிமுறைகளுக்கு அடிப்படையாகும். சமஸ்கிருதச் சொல்லான ‘’சத்யாகிரகா’’ என்பதை தனது போராட்டங்களின் அடிப்படையாக்கிக் கொண்டார். 1914ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அரசு காந்தியின் போராட்டங்களுக்கு செவிமடுத்து அவருடைய கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றபிறகு இந்தியா திரும்பினார் திருவாளர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
இந்திய சுயாட்சிக்கான சுதந்திரப்போராட்டத்தில் காந்தியும் ஒரு தலைவரானார். முதல் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் காந்தி மீண்டும் தனது சத்யாகிரக அஹிம்சைப் போராட்டத்தைப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் துவங்கினார். 1907ம் ஆண்டு முகம்மது அலி ஜின்னாவால் முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டதும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும். இந்திய சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக 1919ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தின் விளைவாக இந்தியா முழுவதும் சத்யாகிரக போராட்டம் மளமளவெனத் தொண்டர்களிடையே பரவத் தொடங்கியது.
ரௌலட் சட்டத்துக்கு எதிராக அமிர்தசரசில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ஜெனரல் டயர் என்பவனால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு நீதி கேட்டு காந்தியால் உருவாக்கப்பட்டதே ஒத்துழையாமை இயக்கம். இதன்படி இந்திய அதிகாரிகள் கூட்டம்கூட்டமாக பிரிட்டிஷ் வேலைகளை ராஜினாமா செய்தனர். அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட்டன. இந்தியக் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படாமல் நிறுத்தப்பட்டனர்.

இந்தியா முழுவதும் போலீஸாரின் லத்தி அடிகளையும் மீறி சாலை மறியல் போராட்டம் தீவிரமடைந்தது. காந்தி கைது செய்யப்பட்டு விரைவிலேயே விடுதலையும் செய்யப்பட்டார்.
காந்தியின் சுயராஜ்ய போராட்டத்தின் மற்றுமொரு முக்கியமானது ‘’அயலார் பொருள் புறக்கணிப்பு’’ போராட்டம். இந்திய தொழில்களை காப்பதற்காக காந்தியால் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போதுதான் அவர் கைராட்டையை சுற்றத்தொடங்கினார்.
1921ம் ஆண்டு இந்தியன் நேஷனல் காங்கிரஸ் முழுத்தலைமைப் பொறுப்பையும் காந்திக்கு அளித்தது. காந்தி தனது மேலாடையைத் துறந்து கொஞ்ச கொஞ்சமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியதில் அவரே சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாகிப் போனார். இந்தியர்கள் காந்தியை கடவுளுக்கும் மேலாகப் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு உருவான பேரே ‘’மகாத்மா’’.

1924முதல் 1930ம் ஆண்டு வரை அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காந்தி மீண்டும் 1930ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி புதிய ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை அறிவித்தார். இதன் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷாருக்கு வரி கொடுப்பதை எதிர்ப்பதாக இருந்தது. பிரிட்டிஷார் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து காந்தி நடத்திய உப்புச் சத்தியாகிரகம் எனப்படும் தண்டியாத்திரை ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.

அப்போது கைது செய்யப்பட்ட காந்தி 1931ல் விடுதலை செய்யப்பட்டார். 1931ல் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவரானார். 1932ல் மீண்டும் கைது செய்யப்பட்டபோது தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகச் சிறையிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதால் வேறு வழியின்றி பிரிட்டிஷாரால் விடுதலை செய்யப்பட்டார்.
1934ம் ஆண்டு காந்தி அரசியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு காங்கிரசின் தலைவராகி அப்போதே குடும்ப ஆட்சிக்கு வித்திடப்பட்டது.

1939ல் மீண்டும் காந்தி மேற்கொண்ட ஒரு உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாய் அமைந்தது.

1944ல் பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லீம் லீக்கும் காங்கிரசும் தங்களுக்குள் பேசித்தீர்த்து உடன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற ஒரு முக்கிய கன்டிஷனின் அடிப்படையில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஒப்புக்கொண்டது. 1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது காந்தியின் ஒப்புதலின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் என்ற இருநாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கப்பட்டது.

அந்தப் பிரிவினைக்காகவும், பிரிவினையின் போதும் உயிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைத் தாண்டும் என்பது வரலாற்றுச் செய்தி. 1948, ஜனவரி 30ம் தேதி பிரிவினைக் கலவரத்துக்குப் பழிவாங்கும் நிகழ்வாக க கோட்சே என்ற இந்துவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சரி… இப்போது கட்டுரைக்கு வருவோம்.

# வரலாற்றை எப்படிப் புரட்டினாலும் பிரிட்டிஷார் சாதாரண மக்களை கொடுமைப் படுத்தியதாகவோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அநீதி இழைத்ததாகவோ எங்குமே செய்திகளில்லை. வேலை வெட்டிக்கு போகாமல் சுதந்திரம் வேண்டும் என்று அவர்களையும் வேலை செய்ய விடாமல் சொறிந்து கொண்டிருந்தவர்களின் மீது மட்டுமே பிரிட்டிஷாரால் அடக்குமுறைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறையை அடிமைத்தனமென்றால் இப்போது நாள்தோறும் நாட்டில் நடைபெறும் போராட்டங்களில் நம்மக்கள் மீது நமது போலீஸாரே லத்தி சார்ஜ் செய்வதும், துப்பாக்கி சூடு நடத்துவதும் நடக்கிறதே… இதற்குப் பெயர் என்ன? போராட்டக்காரர்களை அடக்கும் உங்கள் தாமிரபரணி ஆற்றங்கரை துப்பாக்கிச்சூடு, நந்திகிராம துப்பாக்கிச்சூடு போன்றவைகள் தவறில்லையென்றால், ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச்சூடு மட்டும் தவறாகுமா?... ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளியை பிரிட்டிஷ் அரசு தப்பவிட்டதாய்க் கூறி கிளர்ந்தெழுந்த சுதந்திரப் போராட்டம் போபால் விஷவாயுக்கசிவுக் குற்றவாளிகளைத் தப்ப விட்டபோது எங்கே போனது?

# நாட்டின் வளர்ச்சிக்காக பிரிட்டிஷார் விதித்த பல்வேறு வரிகளையும் எதிர்த்து கொதித்தெழுந்து போராடிச் சுதந்திரம் பெற்றதாய் வரலாறு சொல்கிறதே… சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் நாமெல்லாம் வருமான வரி, சொத்து வரி, விற்பனை வரி, வாட் வரி என்று எல்லா வரிகளையும் இன்னும் ஏன் கட்டிக்கொண்டிருக்கிறோம்?... அட தண்டியாத்திரையின் வரலாற்றைப் பேசும் நாட்டில் இப்போது மட்டும் உப்புக்கு விற்பனை வரியில்லையா?...உங்களிடமிருந்து பிரிட்டிஷார் வரி வசூலித்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவு செய்தால் அது அடிமைத்தனம். அதே வேலையை நீங்களே செய்தால் அதுதான் சுதந்திரமா? வேடிக்கையாக இல்லை?

# பிரிட்டிஷ் ஆட்சியில் நமது நாட்டின் செல்வங்களையெல்லாம் இங்கிலாந்துக்குத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கிறோமே… நமது இலட்சக்கணக்கான கோடி பணத்தை கறுப்புப் பணமாக சுவிட்சர்லாந்திலும் இன்ன பிற வெளிநாட்டிலும் கடத்திப் பதுக்கியிருப்பவர்களை என்ன செய்யப்போகிறோம்? இதுதான் சுதந்திரம் நமக்கு வழங்கிய அளப்பரிய பலனா?

# பிரிட்டிஷ் இந்தியா-சுதந்திர இந்தியா என்றொரு ஒப்பீட்டை எடுத்துக் கொண்டால் எல்லா வகையிலும் பிரிட்டிஷ் இந்தியாவே மேலிருக்கும் வரலாறுகள் ஏன் எல்லாவிதத்திலும் மறைக்கப்பட்டன. சுதந்திரம் என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் ஒரு மிகப்பெரிய வரமான வரலாற்றை மறைத்தது எந்த விதத்தில் நியாயமாகக்கூடும்?

# அயலார் பொருள் புறக்கணிப்பு என்றொரு சுதந்திரப் போராட்ட வரலாற்றின் உபயோகம்தான் என்ன? அந்த வரலாற்றின் அடிப்படைச் சுவடுகள் எங்கு போயின நம் நாட்டில்? பெப்சியும் கோக்கும் வந்து காளிமார்க் மற்றும் பவண்டோ குளிர் பானங்களை நசுக்கிய நிகழ்வுகள்தானே இன்று நாடு முழுவதும் எல்லாத் தொழில்களிலுமே நடந்து கொண்டிருக்கின்றன? குண்டூசியிலிருந்து கார்கள் மற்றும் ஏரோப்ளேன்கள் வரை வெளிநாட்டு இறக்குமதிக்கே மதிப்பளிக்கும் மனநிலைக்கு நாம் மாறிவிட்ட பிறகும் அயலார் பொருள் புறக்கணிப்பு போராட்ட வரலாறு இன்னும் நம் பாடப்புத்தகத்தில் இருப்பதுதான் சுதந்திரமா?

# ஒத்துழையாமை இயக்கம்… ம்ம்ம்ம்.. நாட்டுக்கு உருப்படியாய் நாலு நல்ல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்த பிரிட்டிஷாரைத் துரத்திவிட்டு இன்று திருட்டு அரசியல்வாதக் கூட்டங்களுக்கு ஓட்டளித்து முழு ஒத்துழைப்பும் வழங்கிக் கொண்டிருப்பதுதான் சுதந்திரம் நமக்கு வழங்கிய வரமா?

# இவ்வாறெல்லாம் விமர்சிக்கவும் எழுதவும் முடிகிறதே… அது சுதந்திரம் பெற்றதால்தானே என்பது முட்டாள்தனமான வாதமாகும். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே சுதந்திரப் போராட்டம் தவிர மற்ற விஷயங்கள் அனைத்திலும் பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்திரம் முழுவதுமாய் காக்கப்பட்டதற்கு தாதாபாய் நவ்ரோஜியின் கட்டுரைகளே சாட்சியாகும். அதுமட்டுமில்லாமல் இன்று பிரிட்டனில் எவருக்குமே கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்படாமாலா இருக்கிறது? அதுபோலத்தான் இன்றும் நாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்திருந்தால் நமது கருத்துரிமைச் சுதந்திரம் இதைவிட நன்றாகவே இருந்திருக்கும். இன்று வெளிநாடுகளில் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சாமான்யன் கூடத் தட்டிக் கேட்கும் நிலை இருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் எந்தவொரு அரசியல்வாதியின் தவறையாவது சக்தி வாய்ந்த மீடியாவைத் தவிர சாமான்யன் எவனாவது தட்டிக்கேட்க முடியுமா? இதுதான் சுதந்திரமா?

# எப்படிப் பார்த்தாலும் ஒழுங்காய்ப் படித்து தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்களுக்கு இப்போதிருக்கும் சுதந்திரத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகம் இருந்தது என்பதே உண்மையான வரலாறாய் இருக்கிறது. மீண்டும் கூறுகிறேன்… வரலாற்றை அலசி ஆராயும்போது அது நமக்குணர்த்தும் செய்தி பிரிட்டிஷார் சாதாரண மக்களை கொடுமைப் படுத்தியதாகவோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அநீதி இழைத்ததாகவோ எங்குமே செய்திகளில்லை. வேலை வெட்டிக்கு போகாமல் சுதந்திரம் வேண்டும் என்று அவர்களையும் வேலை செய்ய விடாமல் சொறிந்து கொண்டிருந்தவர்களின் மீது மட்டுமே பிரிட்டிஷாரால் அடக்குமுறைகள் நடத்தப்பட்டுள்ளன.

சுதந்திரம் என்ற பெயரில் நாடு முழுவதுமிருந்த எதிர்ப்பையும் சமாளித்துக் கொண்டு இத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றால் பிரிட்டிஷார் நம்மண்ணில் காலடி வைத்தது நமது வளர்ச்சிப் பாதைக்கான அடித்தளமே ஒழிய அடிமைத்தனமான வரலாறென்று பேசுவதற்கு வேலையே இல்லை. பிரிட்டிஷார் இன்னுமொரு 28வருடங்கள் இந்தியாவில் இருந்திருந்து 1975க்கு மேல் சுதந்திரம் வழங்கியிருந்தால் நமது இந்தியா இன்று கற்பனைக்கும் எட்டாத வளர்ச்சியுடன் மிளிர்ந்திருக்கும் என்பது கனவிலும் மறுக்க முடியாத உண்மை.


சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளைக்காரர்களின் வசமிருந்த நாட்டைக் கொள்ளைக்கார அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்து மகாத்மா செய்தது சரிதானா?...

கேள்விகள் ஒருபோதும் ஓயாது!...