SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, April 21, 2011

வாடகைக்கு ஒரு மலர்…

வாடகைக்கு ஒரு மலர்…


துவைப்பதற்கு நாளின்றி
நிதமும் பயன்படுத்தப்படுகிறது – எனது
அழுக்கான இரவுகள்;

விடியல்களினால்
வெளிச்சம் மட்டுமே
என்னிரவுகள்
வெளுக்கக் கூடுமா?

உழைத்தோயும் என்னுடம்புக்கு
ஓய்வில்லையெனினும்
என்னிரவுக்கு ஓய்வுண்டு
மாதம் மூன்று நாட்கள்;

என் விந்தைப் பள்ளியில்
நிதமும் எனக்குத் தேர்வு;
முகம் பார்த்தே
தேர்ச்சி நடக்கும்…
முன்னிரவு முடிந்ததும்
முகமூடியில் வருவதற்கு!

என்றோ என் மனதைக்
கொன்ற பிறகும்
எத்தனை எத்தனை முறை
கொன்றிருக்கிறேன்-என்
தற்கொலை முடிவுகளை!

இருளில் மட்டுமே
எனது பகல்கள்;
இரவல் இன்பமே
எனது தழுவல்கள்;

வயிற்றுக்கு வழிசெய்ய
வழியின்றிப் போயினும்
நோய் அது பரவிடினும்
நாயாய்த் திரிவோரால்
இன்னும் கூட என்னிரவுகள்
அழுக்கடையத்தான் செய்கின்றன..

ஆகம விதிகளும் அன்பு நெறிகளும்
நல்லது கெட்டது நாலும் தெரிவதும்
ஊருக்கு விளங்கா சில உண்மை உணர்வுகளும்
என்றுமே தெரிவதில்லை-என்
விடியாத இரவுகளுக்கு…!

இத்தனைக்கும் நடுவில்
அடிக்கடி தேடத்தான் செய்கிறேன்…
“என் நெஞ்சில் எழும் கேள்விக்கு
எவரிடமிருக்கக் கூடும் பதில்?”....

பெண்மை மலருக்கு உவமையென்றால்
வண்டுகள் வந்து தங்கிச் செல்லும்
நானென்ன ஒரு வாடகை மலரா…?!

6 comments:

  1. //நானென்ன ஒரு வாடகை மலரா…?!// It may be an artificial flower.

    ReplyDelete
  2. the theme is very sad. The perception is good. very nice.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு சுப்பு.

    ReplyDelete
  4. //ஆகம விதிகளும்
    அன்பு நெறிகளும்,
    சில உண்மை உணர்வுகளும்
    என்றுமே தெரிவதில்லை-என்
    விடியாத இரவுகளுக்கு…!// மிகவும் நல்லா இருக்கு தோழரே..

    ReplyDelete