SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, April 21, 2011

பட்டாளத்தான் பொண்டாட்டி நான்…

பட்டாளத்தான் பொண்டாட்டி நான்…



பட்டாளத்தில வேல செஞ்சு
பட்டுச்சீல வாங்கியார
பஞ்சாப்பு போன மச்சான்
பயணம் திரும்புறதெப்போ?

தாய்மண்ண காத்திடவே
தணியாத வேட்கயிலே
தாமரக்குளத்த விட்டு
தண்ணியில்லா காடு போனீக;

உங்காத்தா உசிரு
உம்மயெண்ணி தவிக்குதய்யா,
உங்கொள்ளி கிடைக்குமான்னு
அவ உள்ளம் ஏங்குதய்யா;

நாட்ட காக்குறதுக்கு
வீட்டுக்கொரு ஆளுன்னு
தெருக்கோடி கண்ணீரோட
நாட்டோரம் போனீகளே…

உம்ம வீட்ட காக்குறதுக்கே
ஆம்பிள யாருமில்ல,
இத்தன நாளாகியும்
உமக்கிது வெளங்கலையா?

ஆத்தங்கர அய்யனார
ஆசி வேண்டிக்கிட்டு
ஆம்பிள சிங்கமா நீரு
ஆளில்லா தேசம் போனீக;

உம்புள்ள இன்னும்
ஓராறு மாசத்தில
அழுது புரண்டுகிட்டு
அப்பன் வரும் நாள் கேப்பான்;

ஆத்தா நான் அவன
அரவணச்சி மார் கொடுத்து
எத்தன நாளக்குத்தான்
ஏமாத்தி வைக்குறது?

என்றாவது நீ வர
ஏங்கியே காத்திருக்கேன்,
தந்தி வர வேணாமுன்னு
தினமிங்கே தவிச்சிருக்கேன்;

அரளி விதையெடுத்து
அடுப்பறையில் வச்சிருக்கேன்,
அதுபோல சேதி வந்தா
அதையே நா நெனச்சிருக்கேன்;

உன் வருக பாத்திடவே
பல நாளா காத்திருக்கேன்,
உசிரோட நீ வரவே
ஊர் எல்ல பாத்திருக்கேன்….

7 comments:

  1. மனதை ஏதோ செய்கிறது,உங்கள் புனைவு.

    ReplyDelete
  2. யோகா & samy க்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  3. தமிழ் மணம் இன்று எனக்கு அறிமுகப்படுத்தியதில் சிறந்த கவிதைப் பதிவு !!

    ReplyDelete
  4. மிக்க நன்றி வசந்த்... விமர்சனங்களேயின்றி வாடிப்போயிருந்த என் எழுத்துலகம் உங்களைப் போன்றோரால் வாழவைக்கப்படுமென்று நம்பிக்கை பிறந்திருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது

    ReplyDelete