SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, March 23, 2011

ஒரு காதலியின் கல்யாணம்…- 3



இதயத்தை அறுக்கும்-நின்
நினைவுகள் எல்லாம்
எனைவிட்டு அகலத்தான்-நிதம்
கண்ணீர் சிந்துகிறேன் நான்-நாம்
காதலித்த தினத்தின் நினைவுகளெல்லாம்
என் கண்வழியே கரையட்டுமென்று!
என்றாலும்…….
விழும் ஒவ்வொரு விழித்துளியிலும்
உன் எழில்முகம் தோன்றி
எனை வதைப்பதேனடி?...
நான் வாழ நினைத்த வாழ்க்கையெல்லாம்
உன் வாய் உதிர்த்த வார்த்தைகளில்
அமிலம் பட்ட ரோஜாவாய்
அன்றோடு கருகிப்போயின!

சித்தனுக்கும் கிறுக்கனுக்கும்-ஒரு
நூழிலை வித்தியாசமென்று
எங்கோ படித்த ஞாபகம்;
சித்தனா? கிறுக்கனா?-என்
இன்றைய நிலையென்று
எனக்கே புரியாத மாயம்!

உன் முதல் கல்யாணப்பத்திரிக்கையை
என் முகத்தில் விட்டெறிந்து
என்னிதயத்தை முதன்முதலில்
வெட்டியெறிந்தவள் நீயெனினும்
எத்தனை அடித்தாலும் தாயையே
பற்றி உறவாடும் பிஞ்சினைப்போல
இத்தனை ஆண்டாகியும் உன் நினைவுகளையே
இன்றும் சுற்றிவரும் என்னிதயத்தைத்தான்…
இறந்து போகச்சொல்லி-இன்றுவரை
இரங்கிக்கேட்கிறேன் ஒவ்வொரு இரவிலும்!
இறப்பிற்கு பின்னாலாவது
நின் நினைவுகளெல்லாம்-என்
அஸ்தியோடு சேர்ந்து ஏதாவதொரு
ஆற்றோடு கரைந்து தொலையட்டுமென்று…!

2 comments:

  1. தற்போது தான் உங்கள் வலைபதிவினை பார்க்கிறேன் நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அட‌டே ரொம்ப‌ பாதிக்க‌ப்ப‌ட்டு இருப்பீங்க‌ போல‌ இருக்கு ந‌ண்ப‌ரே,.. (இருந்தாலும் க‌விதை அட்ட‌காச‌ம்), please remove word verification

    ReplyDelete